நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையில் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வந்தனர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தவிடுபோடியானது. இந்நிலையில், சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய சீராய் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பவன் குமார் தாக்கல் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே பவன் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.  

இதனையடுத்து, தண்டனையை நிறைவேற்ற நேற்றே திகாருக்கு வந்து விட்ட தூக்கிலிடும் பணியாளர் பவன் ஜல்லாத் அதற்கான பணிகளை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.