10:38 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultகாங்கிரஸ்காரர்கள் சோர்வடைய வேண்டாம்! ஜனநாயகம் காக்க போராடுவோம் - மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ்காரர்கள் சோர்வடைய வேண்டாம். ஜனநாயகத்தை காக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று பீகார் தேர்தல் தோல்வி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:16 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultசிறையில் இருந்தபடி 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..! மாஸ் காட்டிய ஜேடியு தலைவர்!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜேடியு கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சிறையில் இருந்தபடி 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
06:00 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultசமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளது..! பிரதமர் மோடி பெருமிதம்..! நிதிஷ்குமாருக்கு புகழாரம்!

Bihar Election 2025: சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார், சிராக் பாஸ்வான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவர் வாழ்த்தியுள்ளார்.

Read Full Story
04:20 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultதிமுகவை ஜெயிக்க வைத்தவருக்கு இப்படியொரு நிலையா.? பீகாரில் புஸ் ஆன பிரசாந்த் கிஷோர் - என்ன காரணம்?

மூன்று ஆண்டு பாத யாத்திரை மற்றும் பிரச்சாரத்திற்குப் பிறகும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பீகார் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
03:37 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultஎக்சிட் போல்களை மண்ணைக் கவ்வ வைத்த என்டிஏ கூட்டணி..! சரியாக கணித்தது யாரு தெரியுமா.?

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 முடிவுகள், பெரும்பாலான எக்சிட் போல்களைத் தகர்த்து NDA கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்துள்ளது. இந்த முடிவுகள் நிதிஷ் குமார்-மோடி கூட்டணியின் வலுவான அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Read Full Story
02:55 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultகொடி பறக்குது.. தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மண்ணை கவ்விய பிஆர்எஸ், பாஜக

ஜூப்ளி ஹில்ஸ், நுவாபாடா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஜூப்ளி ஹில்ஸில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். நுவாபாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜெய் தோலகியா முன்னிலையில் உள்ளார்.

Read Full Story
02:29 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultஇஸ்லாமிய வாக்குகளை மொத்தமாக வாரிச்சுருட்டிய பாஜக + ஜேடியு..! பலத்த அடி வாங்கிய காங்கிரஸ்!

Bihar Polls: NDA Wins Muslim Areas, Congress Loses Big: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக வாரிச்சுருட்டியுள்ளது. இங்கு காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Read Full Story
02:08 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultஇரட்டை சதம் அடித்த மோடி அலை.. 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற NDA..!

நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வரலாற்று வெற்றியை நோக்கி செல்கிறது. முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கே இந்த வெற்றிக்கு காரணம்.

Read Full Story
12:36 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultதிடீர் ட்விஸ்ட்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக.. ராஜஸ்தானில் நடந்த அதிரடி மாற்றம்

ராஜஸ்தானின் அன்டா மற்றும் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

Read Full Story
12:09 PM (IST) Nov 14

Bihar Election 2025 Resultராஜஸ்தான், பஞ்சாப்பில் காங்கிரஸ்.... காஷ்மீர் - ஒரிசாவில் பாஜக.. இடைத்தேர்தல் அதிர்ச்சி முடிவுகள்

2025 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

Read Full Story
11:06 AM (IST) Nov 14

Bihar Election 2025 Resultபீகார் இமாலய வெற்றி.. அல்லு விடும் திமுக..! பிஜேபியை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதன் தாக்கம் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என்பதால், திமுக தனது கூட்டணி மற்றும் அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.

Read Full Story
10:05 AM (IST) Nov 14

Bihar Election 2025 Resultபீகாரில் காங்கிரஸ் கூட்டணியை மொத்தமாக முடித்த ஓவைசி..! சிறுபான்மையினர் ஓட்டு சிதறியதால் சிக்கல்

குறிப்பாக, சீமாஞ்சல் பகுதியில் அசாதுத்தீன் ஓவைசியின் AIMIM கட்சி சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பதால், தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
09:04 AM (IST) Nov 14

Bihar Election 2025 ResultBihar Election Result - ஆரம்பம் முதலே அடித்து தூக்கும் பிஜேபி..! பீகார் அதிரடி முடிவுகள் ஆரம்பம்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியும் கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

Read Full Story
08:40 AM (IST) Nov 14

Bihar Election 2025 Resultசீமாஞ்சல் தொகுதியில் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் தொகுதியில் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலையில் உள்ளது. சீமாஞ்சல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

08:34 AM (IST) Nov 14

Bihar Election 2025 Result72 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே என்டிஏ கூட்டணி 70க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மகாகத்பந் கூட்டணி 46 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

08:34 AM (IST) Nov 14

Bihar Election 2025 Resultபீகார் தேர்தல் முடிவை மாற்றும் முக்கியத் தொகுதிகள்.? எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்

பீகார் தேர்தலில் பல முக்கியத் தொகுதிகள் முடிவை மாற்றும் சக்தியாக உள்ளன. பாட்னா சாஹிப், லக்கிசராய், அலிநகர் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பின்மை, ஜன் சுராஜ் கட்சியின் வருகை போன்றவற்றால் போட்டி கடுமையாகியுள்ளது. 

Read Full Story
08:21 AM (IST) Nov 14

Bihar Election 2025 ResultBihar Election Result - 38 மாவட்டங்கள், 46 மையங்கள் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை..

243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ் குமாரின் தலைவிதி தீர்மானிக்கப்படும். கருத்துக்கணிப்புகளில் NDA முன்னிலை பெற்றாலும், முதல்வர் பதவிக்கு தேஜஸ்வி யாதவே முதல் தேர்வாக உள்ளார்.

Read Full Story