எக்சிட் போல்களை மண்ணைக் கவ்வ வைத்த என்டிஏ கூட்டணி..! சரியாக கணித்தது யாரு தெரியுமா.?
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 முடிவுகள், பெரும்பாலான எக்சிட் போல்களைத் தகர்த்து NDA கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்துள்ளது. இந்த முடிவுகள் நிதிஷ் குமார்-மோடி கூட்டணியின் வலுவான அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்புகள்
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 இன் வாக்கு எண்ணிக்கை அரசியல் இந்தியாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான எக்சிட் போல்கள் NDA-க்கு வெற்றி கிடைக்கும் என கணித்திருந்தாலும், தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை முற்றிலும் முறியடித்து “இமாலய அளவிலான வெற்றி” என காட்டுகின்றன. மதியம் 2 மணிக்கான நிலவரப்படி, NDA 200 இடங்களில் முன்னிலை, மகாகட் பந்தன் 27 இடங்களில், மற்றவர்கள் 6 இடங்களில் முன்னிலையில் இருந்தனர்.
இந்த முறை தேர்தல் முடிவு மிக வலுவாக NDA-க்கு சாதகமாக இருந்தது. பல போல்ஸ்டர்கள் NDA-க்கு 135–150 இடங்கள் கிடைக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால் உண்மையில் NDA 200 இடங்களை நோக்கி சென்றது.
எக்சிட் போல் vs தேர்தல் முடிவு
உண்மைக்கு அருகில் இருந்த ஒரே கணிப்பு போல் டைரி ஆகும். அது NDA-க்கு 184–209 இடங்கள் கிடைக்கும் எனத் துல்லியமான கணிப்பு செய்யப்பட்டது.
கணிப்புகள் vs நிஜ நிலை
- ஆக்ஸிஸ் மை இந்தியா: NDA 121–141
- IANS–Matrize: NDA 147–167
- பீப்பிள்ஸ் இன்சைட்: 133-148
- சாணக்யா: 130–138
- பீப்பிள்ஸ் பல்ஸ் : 133-159
- JVC போல்ஸ்: 135–150
- தைனிக் பாஸ்கர்: 145-160
- பி-மார்க்: 142-162
- TIF ஆராய்ச்சி: 145–163
- DV ஆராய்ச்சி: 137–152
- போல் டைரி (நியூ): 184–209 (உண்மைக்கு மிக அருகில்)
BJP–NDAக்கு வரலாற்று வெற்றி
- ஆர்ஜேடி 29 இடங்களுக்கு தள்ளப்பட்டது
- காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை
- JSP (PK கட்சி) 1–2 இடங்களில் மட்டுமே தாக்கம்
- NDA வாக்கு ஒன்றிணைப்பு மிக வலுவானது.
பாஜக வெற்றிக்கு காரணம்
அமித்ஷா முன்னதாகவே, “160-க்கும் மேல் இடங்கள் நிச்சயம்... அரசு உருவாக்குகிறோம்” என்று கூறியிருந்தார். இப்போது முடிவுகள் அதை மீறி, NDA-க்கு மிகப்பெரிய அரசியல் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன.
முக்கிய பாயிண்ட்கள்:
- பெரும்பாலான எக்சிட் போல்கள் தவறு
- வாக்கெடுப்பு டைரி மட்டும் மிக துல்லியமான கணிப்பு
- NDA 200 இடங்களைத் தாண்டும் நிலைக்கு
- மஹாகட்பந்தன் மிகப் பெரிய வீழ்ச்சி
- RJD, காங்கிரஸ் இரண்டும் மிக குறைந்த தொகுதிகளில்
- BJP–JDU இணைப்பு வாக்கு மிக வலுவானது
-நிதிஷ் குமார்–மோடி கூட்டணி மீண்டும் அதிரடி.