பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியும் கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பரபரப்பு, உள்ளே பாதுகாப்பு வளையம், ஒவ்வொரு நிமிடம் மாறும் முன்னிலை நிலவரங்கள் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் ஆரம்பகட்ட தரவுகள், போட்டி கடுமையாக இருப்பதைக் காட்டினாலும், தற்போதைய நிலவரப்படி NDA லீடிங்களில் இருந்து வருகிறது.
NDA 107 இடங்களில் முன்னிலை, மகாகத்பந்தன் 80 தொகுதிகளில் முன்னிலை
சமீபத்திய முன்னிலை நிலவரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், மகாகத்பந்தன் 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சியும் 5 இடங்களில் ஆரம்பகட்ட முன்னிலையைப் பெற்று போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது.
