சிறுநீரில் துர்நாற்றம்: யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..?

சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது அவ்வளவு நல்லதல்ல. அதே சமயத்தில் அவ்வளவு அச்சப்பட வேண்டியளவுக்கு பயங்கரமானதும் இல்லை. உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றால் விரைவில் உடல்நலன் பெறலாம்.
 

Urine smells due to these diseases

சிறுநீரில் நிலவும் வாடைக்கு  பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் சிறுநீரில் ஒரு வலுவான துர்நாற்றம் வீசுவதை சாதாரணமானதாக கருதக்கூடாது. அது பல நீண்டகால உடல்நலப் பிரச்னைகளைக் குறிக்கிறது. உடலில் நன்றாக தண்ணீர் சத்து இருந்தால், சிறுநீர் துர்நாற்றம் வீசாது. ஆனால் உங்கள் சிறுநீரில் குறைந்தளவு தண்ணீர் மற்றும் அதிகமான கழிவுப் பொருட்கள் வெளியேறினால், அதிலிருந்து வலுவான  அம்மோனியா வாடை வரும். சில உணவுகள் மற்றும் மருந்துகள் காரணமாக அப்படியிருக்கலாம். இருப்பினும், துர்நாற்றம் வீசும் சிறுநீர் சுகாதார நிலைமைகளின் அறிகுறி என்பதையும் கவனிக்க வேண்டும்.

நீரிழிவு நோய்

பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சூழல் தற்போது நிலவுகிறது. இதுவொரு நாள்பட்ட நிலை. உங்கள் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது, இந்த பிரச்னை நிலவுகிறது. அப்போது உடலில் சக்கரை அளவை நீங்கள் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் சிறுநீரில் துர்நாற்றம் வீசும். அதை போக்க தினமும் ஏதேனும் சக்கரை குறைவான பழத்தை, சக்கரை சேர்க்காமல் குடித்து வருவது நல்ல பலனை தரும். 

சிறுநீர் பாதை தொற்று

இது நுண்கிருமி பாதிப்பால் ஏற்படும் தொற்று ஆகும். இந்த பாதிப்பு ஏற்படும் நோயாளிக்கு சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் வீசும். அதிலிருந்து அமோனியா பெருமளவில் வெளியாகும். ஒருவேளை இதுகுறித்து தெரியாமல் இருப்பவர்கள், சிறுநீரிலிருந்து துர்நாற்றம் வீசும் போது உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இதற்கு உடனடி மருத்துவக் கண்காணிப்பு அவசியமாக தேவைப்படுகிறது.

சுக்கிலவழற்சி

புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று சுக்கிலவழற்சி. இந்த பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி உருவாகும். மேலும் சிறுநீர் கழிப்பதும் சிரமமாக இருக்கும். அதையடுத்து சிறுநீரில் துர்நாற்றம் வீசும். சிறுநீர்ப்பையில் இருக்கும் வெளியாகும் போது, அதிலிருந்து அழுகிய முட்டை போன்ற நாற்றம் வரும். இதை உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் பாதிப்புக் கூட வரலாம்.

பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!

கல்லீரல் பாதிப்பு

கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு காரணமாகவும் சிறுநீரில் துர்நாற்றம் வீசும். இந்த வாசனை சிறுநீரில் நச்சுகள் குவிவதைக் குறிக்கிறது. கல்லீரல் அதை திறம்பட உடைக்க முடியாதபோது சிறுநீர் வழியாக அது அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பிலிரூபின் அதிகரிப்பதால் இந்த சிறுநீர் பழுப்பு, அம்பர் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கலாம். இதற்கும் உடனடி மருத்துவ கானம் தேவைப்படுகிறது.

பாதிப்பை எப்படி கண்டறியலாம்?

எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எதனால் ஏற்படுகிறது என்பது நீங்கள் ஆராய்ந்தால், அதற்கு நீரிழிவு நோய், கல்லீரல் நோய், புரோஸ்டேட் பிரச்சினைகள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கும். அதற்கு உடனடியாக மருத்துவரை அணுகி நீங்கள் தீர்வை நாட வேண்டும். எந்த பாதிப்பாக இருந்தாலும், அது முன் கூட்டியே தெரியவந்தால் பாதிப்பை விரைந்து குணப்படுத்திவிடலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios