குளிர்காலத்தில் உங்கள் வீட்டை 'கதகதப்பாக' வைத்திருக்க பெஸ்ட் டிப்ஸ்!
Home Warm Tips In Winter : குளிர்காலத்தில் உங்கள் வீட்டை வெதுவெதுப்பாக வைப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
Home Warm Tips In Winter In Tamil
பொதுவாகவே குளிர்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர்கால ஆடைகளை அணிகிறோம். ஆனால் அது போதும் என்று நினைக்கிறீர்களா? உண்மையில் குளிர்காலத்தின் தாக்கம் உடலுக்கு மட்டுமல்ல. கடுமையான குளிர் வீட்டையும் குளிர்ச்சி ஆக்குகிறது.
Home Warm Tips In Winter In Tamil
அத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் வீட்டை குளிர்ச்சியாக வைக்க ரூம் ஹீட்டர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது மின்சார கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ரூம் ஹீட்டர் இல்லாமல் உங்களது வீட்டை சூடாக வைத்திருக்க சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
இதையும் படிங்க: குளிர்காலத்தில் வெந்நீர் இதமா இருக்கும்.. ஆனா ரொம்ப டேஞ்சர்!! யார் குடிக்கக் கூடாது தெரியுமா?
Home Warm Tips In Winter In Tamil
குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்திருப்பது எப்படி?
கனமான மற்றும் அடர் நிற திரைச்சீலையை போடுங்கள்:
உங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து வெளிப்புற குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராமல் தடுக்க கனமான மற்றும் அடர் திரைசீலைகளை போடவும். இதன் மூலம் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராது மற்றும் உங்கள் வீடும் சூடாக இருக்கும்.
Home Warm Tips In Winter In Tamil
தரை விரிப்பு பயன்படுத்தவும்
குளிர்காலத்தில் வீட்டின் தரை ரொம்பவே குளிர்ச்சியாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், தரையில் தரை விரிப்புகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்களது கால் குளிர்ச்சியில் இருந்து பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, உங்களது வீட்டின் தோற்றமும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் இந்த '5' உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க; மீறினால் இதயத்துக்கு ஆபத்து!
Home Warm Tips In Winter In Tamil
மெழுகுவர்த்தி
குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்திருக்க மெழுகுவர்த்தி சிறந்த தேர்வாகும். மெழுகுவர்த்தி வீட்டிற்கு வெப்பத்தை கொடுப்பது மட்டுமின்றி உங்களது வீட்டிற்கு அழகான தோற்றத்தையும் கொடுக்கும் மற்றும் குளிர்ச்சியை குறைக்கும்.
Home Warm Tips In Winter In Tamil
சூடான தண்ணீர் பை
குளிர்காலத்தில் கை கால்கள் ரொம்பவே குளிர்ச்சியாக இருக்கும். எனவே உங்களது படுக்கையின் அடிவாரத்தில் சூடான தண்ணீர் பை வைக்கவும். இது தூங்கும் போது உங்களை சூடாக வைத்திருக்க உதவும்
Home Warm Tips In Winter In Tamil
ஜன்னலை திறந்து வை!
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வராமல் இருக்க வீட்டின் ஜன்னல்களை மூடி வைப்போம். ஆனால் பகலில் சூரிய ஒளி வரும்போது வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்தால், சூரிய ஒளி வீட்டிற்குள் படும் இதனால் வீடும் சூடாக இருக்கும்.