Asianet News TamilAsianet News Tamil

பைல்ஸை சரி செய்ய இத்தனை சிகிச்சை முறைகள் உள்ளதா!

பைல்ஸில் எத்தனை வகைகள் உள்ளன, இதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன ,எப்படி இதனை தடுக்க என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Types of treatments available for Piles
Author
First Published Mar 24, 2023, 10:57 PM IST

இன்றைய நவீன உலகத்தில் பைல்ஸ் எனப்படும் மூலநோய் பலருக்கும் இருக்கின்ற ஒரு நோயாக உள்ளது. இதனை பற்றிக் கூற சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அறியாமையினால் இதனை பற்றி பேசவோ, பகிரவோ செய்வதில்லை. இந்த நோய்க்கு அடிப்படையே உணவு முறையிலும் மற்றும் வாழ்வியல் முறையிலும் ஏற்பட்ட மாறுதல்களால் தான்.

ஒரு சிலருக்கு பெருங்குடலில் உண்டான புண், வீக்கம், ஆசனவாயில் ஏற்பட்ட புற்றுநோய் போன்றவற்றால் கூட மலம் போகும் போது ரத்தகசிவு உண்டாகும். ஆகையால் ஆசனவாயிலிருந்து ரத்தகசிவு உண்டானால் நேரத்தை வீணாக்காமல் மருத்துவரிடம் பரிசோதித்து, தகுந்த காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.இப்படியான பைல்ஸில் எத்தனை வகைகள் உள்ளன, இதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன ,எப்படி இதனை தடுக்க என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பைல்ஸில் 4 நிலைகள் உள்ளன.

முதல் நிலை:

சிறிய அளவிளான வீக்கம் அல்லது தடிப்பு காணப்படும். சிறிய அளவிலான வலி இருக்கும்.

2 ஆம் நிலை:

வீக்கம் சற்று பெரிதாக காணப்படும் மலம் செல்லும் போது சிறிது ரத்தம் வெளியேறும். மலம் சென்ற பிறகு, வீக்கம் தானாக உள்ளே சென்று விடும்.

3 ஆம் நிலை:

வீக்கம் நிரந்தரமாக காணப்படும் ரத்தப்போக்கு சற்று அதிகமாக இருக்கும்.

4 ஆம் நிலை:

வீக்கத்தில் புண் தோன்றும் வலியும் சற்று அதிகமாக இருக்கும். அதிக உதிரப் போக்கு காணப்படும்.

முகத்தை எப்போதும் ஃபிரெஷா, க்ளியர் ஸ்கின்னாக வச்சுக்க தினமும் இதை செய்யுங்க!

எவ்வாறு தடுக்கலாம்:

மூலநோய் கொண்டவர்கள் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவதை தவிர்த்தல் வேண்டும். தவிர மலம் கழிப்பதில் அவசரம் காட்ட கூடாது. அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். காரசாரமான, மசாலா நிறைந்த உணவுகள் , கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

கீரைகள், காய்கறிகள்,தானிய வகைகள், பொட்டுக்கடலை, வாழைத்தண்டு ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். டீ அல்லது காபிக்கு மாற்றாக பழச்சாறுகளையும் , பழங்களையும் சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக நேரம் ஓரே இடத்தில உட்கார்ந்து வேலை செய்பவராயின் அரிது நேரத்திற்கு ஒரு முறை அங்குஇங்குமாக நடக்க வேண்டும்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கான யோகாசனங்களைச் தினமும் செய்து வரலாம். இவையனைத்தும் மூலநோயை தடை செய்யும்.

சிகிச்சை முறைகள்:

சுருங்க வைத்தல்:

ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில் எடுத்து அதனை மூலநோய் இருக்கும் இடத்தில் செலுத்தி, தடித்துள்ள ரத்தக் குழாயைச் சுருங்க வைக்க முடியும். இந்த சிகிச்சை முதல் நிலை மூலநோயாளிகளுக்கு உதவும்.

வளையம் இடுதல்:

இந்த சிகிச்ச்சையில் மூலநோய் இருக்கும் பகுதியைச் சுற்றி ஒரு இறுக்கமான ரப்பர் வளையத்தை வைப்பார்கள். இப்படி செய்வதால் வீக்கத்துக்குள் ரத்தம் வருவதை தடுக்க முடியும்.
தவிர வீக்கம் சுருங்கி விடும் .

உறைய வைத்தல்:

திரவ நிலையில் இருக்கின்ற நைட்ரஜனை மூலநோயின் மேல் செலுத்தினால் அதில் இருக்கும் ரத்தக்குழாய்கள் உறைந்து தானாக சுருங்கும். இதனையும் 2ம் நிலை மூல நோய் உள்ளவர்களுக்கான சிகிச்சை முறையாகும்.

அறுவைச் சிகிச்சை:

நாள்பட்ட மூலநோய் வீக்கம் மிக அதிகமாக காணப்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடலாம். இது வெளிமூலம் இருப்பவர்களுக்கான சிகிச்சையாகும்.

கதிர்வீச்சு சிகிச்சை:

அகச்சிவப்புக் கதிரை செலுத்தி மூலநோய் உள்ள இடத்திற்கு அனுப்ப படுகிறது. இவை மூலநோய்க்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்தி வீக்கத்தை சுருங்க செய்யும்.

முதல் மற்றும் இரண்டாம் நிலை உள்ளவர்கள், இதர நோய் உள்ளவர்கள் , கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு மயக்க மருந்து தாரா முடியாத சூழலில் இருப்பவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

லேசர் சிகிச்சை:

லேசர் கதிர்கள் மூலமாக மூலநோயில் காணப்படும் திசுக்களை அழித்து விடுவதே இந்தச் சிகிச்சையாகும்.

ஸ்டேப்ளர் சிகிச்சை:

புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறையாகும். அதிக பணச்செலவில் செய்யப்படும் எளிய சிகிச்சை முறை. ஸ்டேப்ளர் கருவியின் துணையுடன் மூலநோயின் மேற்பரப்பை தையல் போட்டு இறுக்கி விட்டு, மற்ற பகுதியை வெட்டி விட்டு தையல் போடுவார்கள்.

உங்களுக்க்கான சிகிச்சையை மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ளுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios