தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைகள் பலரும் தங்களது ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. மறுபுறம் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களின் அபாயமும் அதிகரித்து வருகிறது. எடை அதிகரிப்பைப் பற்றி பேசுகையில், அது எளிதில் அதிகரித்து விடும். ஆனால் அதை குறைப்பது தான் சற்று கடினமான காரியம். குறிப்பாக தொப்பை கொழுப்பு உங்களது ஒட்டுமொத்த தோற்றத்தையும் கெடுத்துவிடும்.

அதைக் குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை கையாளுகிறார்கள். சிலர் ஜிம்முக்கு சென்று மணிகணக்கில் வியர்வை சிந்துகிறார்கள். மற்றவர்களோ வெவ்வேறு வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆனால் தொப்பை கொழுப்பு ஏன் அதிகரிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது சாதாரண விஷயம் தானே என்று கருதி சிலர் அதை அப்படியே விட்டு விடுகிறார்கள். ஆனால் உண்மையில் தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் :

1. அதிக கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுதல்

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் அது நம் உடலில் குவிந்து விடும். அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் நுழையும் போது அவை குளுக்கோஸாக மாறிவிடும். அந்த குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்தாவிட்டால் அது கொழுப்பாக மாறிவிடும். இந்த கொழுப்பு தான் வயிற்றை சுற்றி சேர தொடங்கும்.

2. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை

தூக்கையின்மை காரணமாக நம்முடைய உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கும். அந்த கார்டிசோல் பதட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வயிற்றுக்கு அருகில் கொழுப்பை சேமிக்க உடலை சமைக்க செய்யும். தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பருமனாக இருப்பதற்கு இதுவும் தான் காரணம்.

2. லேசான நடை பயிற்சி

லேசான நடை பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க இது போதாது. ஆம் , வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்கவும், இதய துடிப்பை அதிகரிக்கவும் தினமமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிகளை செய்வது ரொம்பவே முக்கியம் எனவே விறுவிறுப்பான நடை பயிற்சி, ஜாக்கின், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யலாம். உங்களது உடலில் எவ்வளவு அதிகமாக வியர்வை வெளியேறுகிறதோ, அவ்வளவு வேகமாக எடை குறையும்.

4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நார்ச்சத்து நீங்கி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் தான் இருக்கும். இது தவிர பால் பொருட்களும் உடலில் கலோரிகள் அளவை அதிகரிக்கும். எனவே அவற்றிற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தொப்பை குறைக்கவும் குறைக்கவும் உதவும்.

5. மரபு காரணங்கள்

சில சமயம் தொப்பை குறைப்பு மரபு ரீதியாகவும் ஏற்படுகிறது. இதை மன அழுத்தம் இல்லாமை, சரியான உணவு முறை, உடற்பயிற்சி மூலம் குறைத்து விடலாம். இதற்கு தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.