Belly Fat: தொப்பை இருந்தா இவ்வளவு டேன்ஜரா? என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
தொப்பை என்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் மிகவும் தீங்கானது. தொப்பையினால் ஏற்படும் 5 முக்கிய நோய்கள் நுரையீரல் அடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய், கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் இதய நோய் ஆகும்.
Belly Fat
பொதுவாகவே நோய் வந்துவிட்டால் இக்காலகட்டத்தில் நாம் அனைவருமே மருத்துவத்தை நோக்கி செல்கின்றோம். ஆனால் நாம் உண்ணக்கூடிய உணவுகளே சில சமயங்களில் மருந்தாகவும் செயல்படும். அப்படிப்பட்ட பல மருத்துவ குணங்களைக் கொண்ட பழம் தான் நாவல் பழம். இந்த நாவல் பழம் கிடைக்கக்கூடிய மரம் இலை வேர் பழத்தின் கொட்டை என அனைத்துமே நல்ல மருத்துவ குணம் கொண்டது என்று சொல்லப்படுகின்றது.
Lungs
நுரையீரல் அடைப்பு
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருப்பதே காரணம். மேலும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். இதனால் அவர்களால் சீராக மூச்சு விட முடியாது.
இதையும் படிங்க: Health Benefits of Walking: அடேங்கப்பா.. நடைபயிற்சி சென்றால் இதயத்திற்கு இவ்வளவு நன்மைகளா?
Cancer
புற்றுநோய்
20 சதவீத புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான உடல் பருமனும் ஒரு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே தொப்பை இருந்தால் புற்றுநோய் வருவதற்கான தாக்கம் அதிகம் உள்ளது ஆய்வுகள் கூறுகின்றன.
Diabetes
சர்க்கரை நோய்
பணக்காரர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என கூறப்பட்டு வந்தது. தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் சர்க்கரை நோய் வருகிறது. இந்த சர்க்கரை நோய் வருவதற்கு தொப்பையும் முக்கிய காரணம் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
Fatty liver
கல்லீரல் கொழுப்புநோய்
வயிறு மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குவதால் ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால், மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.
Heart Disease
இதயநோய்
அடிவயிற்றுக் கொழுப்பின் தேக்கத்தால், இதய நோய்கள் மிகவும் வேகமாக ஒருவரைத் தாக்கும் அபாயம் உண்டு. ஆகவே, இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமெனில், உடல் எடையுடன் தொப்பையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தொப்பை சிறிதாக ஏற்பட தொடங்கும் போதே, உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் சரி செய்து பெரும்பாலான நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.