Asianet News TamilAsianet News Tamil

புரோட்டீன் குறைபாட்டால் பாலியல் நடவடிக்கையை பாதிக்கப்படுமா...??

சில நேரங்களில் குறைந்த லிபிடோ கூட பாலியல் மீதான ஆர்வத்தை வரவழைக்காது. ஆனால் புரோட்டீன் குறைபாடு என்பது உடல்நலன் சார்ந்து மட்டுமல்ல, ஆரோக்கிய பிரச்னைகளையும் உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

protein deficiency also reduce sex drive says recent study
Author
First Published Mar 18, 2023, 5:33 PM IST

பெண்களுக்கு உடலுறவின் மீதான இன்பம் அல்லது ஆர்வம் குறையும் கட்டத்தை மருத்துவறையில் மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் வேலை மற்றும் குழந்தைகளின் அதிகப்படியான சோர்வு கூட பாலியல் செயல்பாட்டின் மீது வெறுப்பை உருவாக்கக்கூடும். ஆனால் செக்ஸ் டிரைவ் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருசில சமயங்களில் ஊட்டச்சத்து குறைபாடு கூட காரணமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக புரோட்டீன் குறைபாடு பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புரதக் குறைபாடு பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

அமெரிக்காவில் உள்ள மருத்துவ இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. அதில் வயது வந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 46 கிராம் புரதம் தேவைப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு உணவிலும் குறைந்தது 15 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இதை விட குறைவாக சாப்பிடுவதால் புரதச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் புரோட்டீன் குறைபாட்டால்ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் பாலியல் திறன் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புரதம் இல்லாதது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களின் முக்கியத்துவம்

கர்ப்பிணிப் பெண்கள் போதுமான புரதத்தைப் பெறுவது முக்கியம். ஏனெனில் போதிய ஊட்டச்சத்து கருவின் வளர்ச்சியை பாதிக்கிறது. புரோட்டீன் குறைபாடு தசை இழப்புக்கு வழிவகுக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் குறைந்து எலும்புகள் சேதமடைகின்றன. இந்த காரணங்கள் அனைத்தும் குறைந்த லிபிடோ பிரச்சனைகளை ஏற்படுத்தும். உண்மையில் புரத உணவுகளில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. நமது செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துகிறது. பருப்பு வகைகள், பீன்ஸ், கோழிக்கறி, முட்டை போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் புரதத்தைப் பெறலாம். லிபிடோ அதிகரிக்கிறது. 

நல்ல பாலுறவு ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

குயினோவா

குயினோவா என்பது நம்முடைய நாட்டு சிறுதானியங்களான வரகு சாமை, தினை, குதிரைவாலி ஆகிய தானியங்களைப் போன்றது தான். இதில், 11 அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து, ஃபோலேட், தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகமும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் 1 கப் சமைத்த குயினோவாவை சேர்த்துக்கொள்வது புரதச்சத்து குறைபாட்டை தடுக்க உதவும். செக்ஸ் வாழ்க்கை ஆரோக்கியமாக்கும்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட சோளம்

சோளத்தில் போதுமான அளவு புரதம் உள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியமும் இதில் உள்ளது. ஒரு வறுத்த சோளத்தில் 3 கிராம் புரதம் உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதை சாப்பிட்டால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

உணவை சேமிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம்; ஏன் தெரியுமா?

சால்மன் மீன்

சால்மனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது புரதத்தின் சிறந்த மூலமாகும். சால்மன் மீனை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் புரதச்சத்து குறைபாடு நீங்கும். ஜர்னல் ஆஃப் செக்சுவல் ஹெல்த் படி, இது சுழற்சியை அதிகரிக்கிறது மற்றும் லிபிடோவை மேம்படுத்துகிறது.

முட்டை

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. ஒரு முழு முட்டையை சாப்பிடுவதால் 2 முட்டையில் 12 கிராம் புரதம் கிடைக்கிறது. இது வயிற்றை நிரம்ப வைப்பது மட்டுமின்றி தசைகளின் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருந்தால், முழு முட்டையையும் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் முட்டையின் மஞ்சள் கருவில் பாதி புரதம் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios