Asianet News TamilAsianet News Tamil

காரம் சாப்பிட்டால் மூலப் பிரச்னை வருமா..?? உண்மை பின்னணி இதுதான்..!!

உடல் சூடு அதிகரிப்பு மற்றும் மிகவும் காரமான உணவுகளை சாப்பிடுவதும் தான் மூல நோய் பாதிப்புக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன. உண்ணும் உணவில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரப்படாமல், ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் விளைவு தான் இது என்கிற கருத்தை ஒருசிலர் கூறுகின்றனர். நமது நாட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுகள் காரமாகத்தான் இருக்கும். அதுதான் இந்திய உணவு பண்பாட்டுக்கான அடிப்படை. காரமான உணவுகள் ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து பல ஆண்டுகளாக பெரும் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக காரமான உணவுகளை உட்கொள்ளும் போது கண்ணீர், மூக்கு ஒழுகுதல், நாக்கில் உணர்வு மற்றும் காதுகளின் சிவத்தல் உள்ளிட்ட உணர்வுகளை உடல் பிரதிபலிக்கிறது. உணவு சேர்க்கை மற்றும் அதை சமைக்கும் பக்குவத்தில் காரச் சுவைக்கான நன்மை மற்றும் தீமைகள் மனித உடலுக்கு கிடைக்கின்றன.
 

ncbi research study says spicy foods causes piles
Author
First Published Sep 29, 2022, 9:37 PM IST

மூல நோய்

ஆசனவாயின் உள்ளே நரம்புகள் வீக்கமடையும் போது மூல நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவத் துறை நிபுணர்கள் கூறுகின்றன. இதற்கு உணவுக்கு அடுத்தப்படியாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது கழிப்பறையில் அதிக நேரம் செலவிட்டு மலம் கழிப்பது போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன. மலக்குடலில் வலி எடுப்பது, கழிவறையில் உட்காரும் போது வலி உண்டாவது, செரிமான பிரச்னைகள் போன்றவை மூல நோய்க்கான அறிகுறிகள். உங்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.

கார உணவு செய்யும் பாதிப்பு என்ன?

மூல நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது கார உணவுப் பழக்கம். நாம் சாப்பிடும் மிளகாய்களில் கேப்சிகைன் என்கிற அமிலம் இயற்கையாகவே உள்ளது. இது பூச்சிகள் மிளகாய்களை உண்பதில் இருந்து தடுக்கிறது. இதை அதிகமாக உட்கொள்ளும் போது, நமது வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் இணைந்து எரிச்சலை உண்டாக்குகிறது. நீங்கள் மலம் கழிக்கும் போது ஆசனவாய் தூவாரத்தில் எரியும் உணர்வை அனுபவித்தால், உங்கள் உடலில் மிளகாய் முழுமையாக செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம். அது தெரியாமல் நீங்கள் தொடர்ந்து காரமான உணவுகளை உட்கொண்டு வந்தால், நாளிடைவில் அது மூலப் பிரச்னைக்கு வித்திடும்.

மூலநோய் ஏற்படுவதற்கு கார உணவுப் பழக்கம் தான் காரணமா?

குடல் உறுப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே மூல நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது கார உணவுப் பழக்கம் அதிகரிக்கும் போது, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள குடல் செயல்பாடு மூலநோயை ஏற்படுத்திவிடக் கூடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடலின் தேவை மீறி காரண உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இதன்மூலம் மூல நோய் பாதிப்பு உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகி விடுகின்றன.

அசைவ உணவை தவிர்க்க எண்ணம் இருந்தும் ஆசை விடவில்லையா? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

மூலநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

தினசரி குறைந்தளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு மலம் மிகவும் இருக்கமாக போகும். அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு மூல நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிகளவில் தண்ணீர் குடிப்பது, உடலை முடிந்தவரையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது, அதிகளவில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்கள் சாப்பிடுவதை வழக்கிமாக்கிக் கொள்ளுதல் போன்றவை இந்த பிரச்னையை விரைந்து சரியாக்கிடும். அதேபோன்று மலல் இறுகி வெளியேறும் போது கோழிக் கறி, நண்டு, சிங்க இறால் போன்ற சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் கருப்பு ஜூஸ், மாம்பழம் சாப்பிடுவது போன்றவற்றையும் தவிர்த்தல் நலம்.

மிளகுக்கு மாறுங்கள்

ஒரு சிலருக்கு மிளகாய் காரம் ஒத்துவராது. அது அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களைப் போன்றோர் ஏதேனும் ஒரு நாளில் அதிகளவில் மிளகாய் காரம் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்டால், ஒவ்வாமைக்கு ஆளாக நேரிடும். இதனால் ஏற்படும் வயிற்றுப் போக்கு மற்றும் ஆசனவாய் புண் மூலப் பிரச்னையை உண்டாக்கும். அந்த சவுகரியத்தை தடுக்க விரும்புவோர், மிளகாய்க்கு பதில் மிளக்கு மாறலாம். மிளகாய், மிளகாய் பொடி போன்ற கார வகைகளைத் தவிர்த்து மிளகு, கிராம்பு போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios