ஆண்களுக்கு அசுர பலம் கிடைக்க இந்த செடியின் 1 விதை மட்டுமே போதும்!!
ஆண்களில் சிலருக்கு ஆண்மைக் குறைபாடு, உடல் வெப்பம், அதிக எடை போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். அதை எளிதில் சரி செய்ய நத்தை சூரி மட்டும் போதும்.
நத்தை சூரி என்றால் ஏதோ கடல் உயிரினம் என்று நினைக்காதீர்கள். இது அரிய வகை மூலிகையாகும் இதனுடைய பெயர் மட்டும் வித்தியாசமானது இல்லை, இது கொடுக்கும் நன்மைகளும் ரொம்பவே வித்தியாசமானது. நத்தை சூரி மூலிகையில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன. எலும்பு சார்ந்த நோய்களை விரட்டியடிக்க சித்த மருத்துவத்தில் நத்தை சூரி மூலிகையை தான் பரிந்துரைப்பார்கள்.
பூண்டு வகையை சேர்ந்த நத்தை சூரி மூலிகையின் விதை, வேர் ஆகியவையும் மருத்துவ குணங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. இதனை குழி மீட்டான், தாருணி, நத்தை சுரண்டி, கடுகம், தொலியாகரம்பை, போன்ற பல்வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். உடலின் சூட்டை மொத்தமாக குறைக்க நத்தை சூரியை எடுத்து கொள்ளலாம்.
சூட்டை தணிக்க..!
உடலில் இருக்கும் வெப்பத்தை தணிக்க நத்தை சூரியை பயன்படுத்தலாம். நத்தை சூரி மூலிகையின் விதைகளை கொஞ்சம் வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளைகள் குடித்தால் போதும். எப்பேர்ப்பட்ட உடல் சூடும் தணியும்.
வயிற்றுகோளாறு
நத்தை சூரி விதை பொடி கலந்த பால் உடல் கழிவுகளை நீக்கும். சிறுநீரகக் கல்லை வெளியேற்றும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். அதைப் போல நத்தை சூரி விதை பொடியாக்கி ஒரு ஸ்பூன் தேனில் கலந்து உண்பதால் சீதபேதி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
உடல் பருமன்
நத்தை சூரி விதைகளை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை நீரில் கலந்து காய்ச்சி அத்துடன் பால் சேர்த்து காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். உடலில் கெட்ட கொழுப்பு தாங்காது. விரைவில் உடல் எடையும் குறைந்து ஆரோக்கியமாக மாறுவீர்கள். ஆண் பெண் யாராக இருந்தாலும் வெள்ளை, வெட்டை நோய்கள் பூரண குணமாகும்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் உடலை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!
தாய்ப்பால் சுரப்பு
பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க நத்தை சூரி மூலிகை உதவுகிறது. இதற்கு நத்தை சூரி மூலிகையின் வேரை 10 கிராம் எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். அதுமட்டுமின்றி பெண்களுடைய மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் அதுவும் நத்தை சூரி வேர் பொடியால் நீங்கும். வெள்ளைப்படுதல் முற்றிலும் குறையும்.
ஆண்மை அதிகரிக்கும்
நத்தை சூரி மூலிகையுடைய விதையை அரைத்து கொள்ளுங்கள். இதை அரை நெல்லிக்காய் அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு டம்ளர் பாலில் நாள்தோறும் இருவேளை பருகினால் உடல் வலுவாகும். ஆண்மையும் அதிகரிக்கும். தரமான வித்துக்களின் எண்ணிக்கை உயரும்.
இதையும் படிங்க: இந்த பழத்தை சாப்பிட்டால் ஆயுசுக்கும் சுகர், மாரடைப்பு பிரச்சனையே வராது