நடை பயிற்சியின் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!!
உடலுக்கு சோம்பலை பழக்காமல், எப்போதும் இயக்கத்துடன் வைத்துக்கொள்வது பின்நாளில் உடல்நலப் பிரச்னைகளை விளைவிக்கும். அதை தவிர்ப்பதற்காக பலரும் தேர்வு செய்யும் பயிற்சி தான் நடைப்பயிற்சி.
உடலுக்கு சோம்பலை பழக்காமல், எப்போதும் இயக்கத்துடன் வைத்துக்கொள்வது பின்நாளில் உடல்நலப் பிரச்னைகளை விளைவிக்கும். அதை தவிர்ப்பதற்காக பலரும் தேர்வு செய்யும் பயிற்சி தான் நடைப்பயிற்சி. பெரும்பாலானோர் காலையில் தான் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். பலமுறை வீட்டை சுற்றி நடப்பது, மொட்டை மாடியில் சுற்றிச் சுற்றி நடப்பது, பலமுறை அலுவலகப் படிகளை ஏறி இறங்குவது, சாலையில் நடந்துகொண்டு பயிற்சி செய்வது என தங்களால் முடிந்தவரையில் நடைப் பயிற்சி செய்கின்றனர். ஆனால் ஒருசிலரோ நானும் வாக்கிங் போகிறேன் என்கிற பெயரில் பேருந்து நிறுத்தம் வரை நடந்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொள்வது, தூக்கம் வரும் வரை வீட்டுக்குள்ளே நடப்பது, மொட்டை மாடிக்குச் சென்று தோன்றும்போதெல்லாம் நடப்பது என அரைகுறையாக ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் வாக்கிங்கில் சேரவே சேராது. இதை தவிர்த்து நடைப்பயிற்சி செல்லும் போது, நாம் செய்யும் பிற தவறுகள் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
குறைந்தது அரைமணி நேரம் வாக்கிங் செல்ல வேண்டும்
ஒருவர் குறைந்தது காலைவேளையில் அரைமணி நேரமாவது வாக்கிங் செல்வது நன்மையை தரும். நடைப் பயிற்சி செல்லும் போதே, கைகளையும் கால்களையும் நன்றாக அசைத்து நடக்க வேண்டும். அப்போது நல்லமுறையிலான வாக்கிங் ஷூ அணிந்திருப்பது உசித்தமாக இருக்கும். நடைப் பயிற்சியின் போது மூட்டுத் தேய அதிக வாய்ப்புள்ளது. அதை தடுப்பதற்கு நல்லமுறையில் தயாரிக்கப்பட்ட ஷூ பயன் தரும். வெறும் காலிலோ அல்லது செருப்பு அணிந்து நடக்கக்கூடாது.
கைகளை வீசி நடப்பது முக்கியம்
நடைப் பயிற்சி செய்யும் போது கால்களை மட்டுமில்லாமல், கைகளையும் நன்றாக வீசி நடக்க வேண்டும். அப்போது தான் சரியான விகிதத்தில் உடலில் இடம்பெற்றுள்ள கலோரிகள் கரையும். நடக்க ஆரம்பித்துவிட்டால், எங்கேயும் நின்று ஓய்வு எடுப்பது கூடாது. நடக்க தொடங்கிவிட்டால் அரை மணிநேரம் நன்றாக நடந்துவிட்டு, பிறகு நின்றுவிட்டு, மறுபடியும் நடக்க தொடங்கலாம். எப்படி நடக்க தொடங்குகிறீர்களோ, அதேவேகத்தை அரைமணி நேரம் வரை தாக்குப்பிடித்து நடப்பது முக்கியம்.
அதிக நேரம் உறவில் ஈடுபட்டால் ஆபத்தா?
நேர்கொண்ட பார்வையுடன் இருப்பது முக்கியம்
பொதுவாக நடைப்பயிற்சி செய்யும் போது கலோரிகள் எரிக்கப்படுவது மிகவும் குறைவு தான். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே கலோரி அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும். எப்போது நடைப் பயிற்சி சென்றாலும் நேர்கொண்ட பார்வையுடன் முதுகுத் தண்டை நேராக வைத்து தான் நடக்க வேண்டும். அப்போது தான் உடலில் இருக்கும் கலோரிஅக்ள் அதிகளவு எரிக்கப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வீட்டில் நடப்பது போன்று சாதாரணமாக நடந்தால் எந்த பயனும் கிடையாது.
குளிர்காலம் உங்களை நெருங்குகிறது- சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முக்கிய டிப்ஸ்..!
நடையில் கவனம் இருப்பது முக்கியம்
நடந்துவிடுவதால் மட்டும் உங்களுடைய உடல் ஃபிட்டாக மாறிவிடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்கிங் செல்வதால் உடலில் கொழுப்பின் இருப்பு குறையும் மற்றும் கலோரிகள் சிறிதளவு மட்டும் குறையும். இதனால் உங்களுடைய உடல் ஃபிட்டாக மாறிவிடாது. அதற்கு தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் நடைப் பயிற்சி தொடங்கிய காலத்திலிருந்து உடலில் நடக்கும் மாற்றங்களை சரிவர கவனிக்க வேண்டும். அதேபோன்று நடக்கும் போது நடைப் பயிற்சியில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.
இடைவெளியிட்டு நடைப் பயிற்சி செய்யலாம்
தினந்தோறும் நடக்க ஆரம்பித்தவுடன், அதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாக்கிங் செல்வதை வழக்கமாக்க வைத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தை தவறாமல் தினந்தோறும் கடைப்பிடித்து வாருங்கள். குறைந்தது அரை மணிநேரம் நடந்துவிட்டு, சிறுது நேரம் இடைவேளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் உடலில் இருக்கும் ஆற்றல் நம்முடைய கட்டுக்குள் இருக்கும். தொடர்ந்து நடப்பதால் உடல் சோர்ந்துவிடும். அதனால் இடைவெளி எடுத்துக் கொண்டு நடப்பதில் எந்த தவறும் கிடையாது.