குளிர்காலம் உங்களை நெருங்குகிறது- சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முக்கிய டிப்ஸ்..!
குளிர்காலத்தில் பெரிய அளவில் சூரிய வெப்பம் சருமத்தை பாதிக்காது. அதற்காக சன் ஸ்க்ரீனை நாம் மறந்து விடக்கூடாது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதையடுத்து விரைவில் குளிர் காலம் தொடங்க உள்ளது. மாறும் இந்த பருவநிலை காரணமாக நம்மளுடைய சருமமும் மாற்றம் பெறும். பொதுவாக மழைக்காலங்களில் சருமம் ஈரமாகவும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். ஆனால் குளிர்காலம் என்று வந்துவிட்டால் பெரும்பாலோனோருக்கு சருமம் வறட்சி பெறும். திடீரென மாறும் பருவ நிலையின்போது மாற்றமடையும் சருமத்தின் தன்மையையும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் எதிர்பாராத ஒன்றாக தெரிந்தாலும், சரும நலன்கருதி ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பாக அமையும். இதை செய்யத் தவறினால், அடுத்த சரும பிரச்சனை ஏற்பட வழிவகுக்கும். இதை எளிமையாக கையாளும் விதமாக சில பயனுள்ள மற்றும் அவசியமான தகவல்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
சன் ஸ்க்ரீன் கட்டாயம்
கோடைகாலத்துடன் ஒப்பிடும் போது, குளிர்காலத்தில் பெரிய அளவில் சூரிய வெப்பம் சருமத்தை பாதிக்காது. அதற்காக சன் ஸ்க்ரீனை நாம் மறந்து விடக்கூடாது. கோடை காலத்தைப் போலவே குளிர் காலங்களிலும் சன் ஸ்கிரீனை சருமத்திற்கு பயன்படுத்துவது அவசியமான ஒன்று. மேகமூட்டத்தை தாண்டி புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இது சருமத்தை எளிதாக பாதிக்கச் செய்யும். அதை தவிர்க்க சருமத்துக்குசன்ஸ்கிரீன் கட்டாயம் போட வேண்டும். ரெட் ராஸ்பெர்ரி க்ரீம் போன்று இயற்கையாக எஸ்.பி.எஃப் பண்புகளைக் கொண்ட சன் ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். இது குளிர் காலத்திலும் சர்மத்தை காக்கும் மற்றும் ஈரப்பதத்துடன் சருமத்தை பராமரிக்க உதவும்.
அதிகமாக தண்ணீர் குடியுங்கள்
எப்போதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு நன்மையை வழங்கும். எந்தவித பருவநிலை மாறுபாடும் தொடர்ந்து தண்ணீரை அருந்துவது சர்மத்திற்கு நாம் செய்யும் பெரும் உதவியாகும். அளவுக்கு அதிகமாக மது குடிப்பது, காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்துவது மற்றும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்றவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க நாம் முடிந்தவரையில் தண்ணீர் அருந்தி வருவது, சர்மத்திற்கு சுகாதாரமாக அமையும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பதால், உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்கும். ஒருவேளை பருவமாறுபாட்டால், சருமம் பாதிக்கப்பட்டாலும் ரத்த ஓட்டம் சீர்படுத்தும்
சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம்
குளிர்காலங்களில் சருமம் வறட்சி நிலையை அடையலாம். அப்போது சருமத்தை ஈரப்பதத்துடன் பராமரித்து வந்தால் சருமம் உடைவது மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளிலிருந்து காக்கலாம். உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு மாஸ்சுரைசரை தேர்வு செய்வது முக்கியம். சணல் எண்ணெய் ஒரு அற்புதமான மாஸ்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். சனல் என்னைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இது அனைத்து தோல் வகைகளுக்கும் சமமான நன்மையை வழங்குவது தெரியவ்ந்துள்ளது.
மழைக்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?
வளமான உணவுப் பழக்கம்
சரும பராமரிப்பில் நல்ல உணவுப் பழக்கத்திற்கும் முக்கிய இடமுள்ளது. ஒருவேளை நீங்கள் தவறான உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தால், அதன் சரும பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இதனுடைய வெளிப்பாடு அதிகமாகவே இருக்கும். முடிந்த வரையில் உங்களுடைய உணவு முறையில் அதிகளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலும் உங்களுடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறான, சர்மத்திற்கு நன்மை செய்யும் வகையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் அமைவது முக்கியம்.
மழையில் குளித்தால் உடலுக்கும் கேசத்துக்கு பலன் கிடைக்குமா? ஆய்வு சொல்வது என்ன..??
உடற்பயிற்சி அவசியம்
உணவு கட்டுப்பாட்டுக்கு பிறகு, உடற்பயிற்சி சர்மத்திற்கு நன்மைகளை வழங்குகிறது. பொதுவாக குளிர்காலங்களில் அதிக அளவு வியர்க்காது. ஆனால் சரும நலனை பின்பற்றி வருவோர், அதிக அளவு வியர்வையைத் வெளிப்படுத்தவேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அதற்கேற்றவாறு உடல் உழைப்பு இருக்க வேண்டும். அதனால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இது ரத்த ஓட்டத்திற்கும் உடலில் உள்ள செல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். யோகா, ஓட்டம், விளையாட்டு போன்ற செயல்பாடுகளை குளிர் காலங்களில் மேற்கொள்வது சரும பராமரிப்புக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.