சின்ன வெங்காயத்தை வைத்து சுகர் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் கட்டுக்குள் வைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
ஒரு காலத்தில் சர்க்கரை நோய் அரிதான நோயாக இருந்தது. ஆனால் தற்போது சுகர், கொலஸ்ட்ரால், பிபி இல்லாதவர்களே கிடையாது என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டோம். இத்தகைய சூழ்நிலையில் கொலஸ்ட்ரால் மற்றும் சுகர் இரண்டையும் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவும் என்று சொன்னால் உங்களில் நல்ல முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
வெங்காயம் இல்லாத சமையலறையே கிடையாது. வெங்காயம் சுவையே கொடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அவை சுகர் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சரி செய்யும். மேலும் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களையும் செய்யும். சரி இப்போது சுகர் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் கட்டுக்குள் வைக்க வெங்காயம் எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் குறைக்க வெங்காயம் எப்படி உதவும்?
வெங்காயம் சாற்றில் இருக்கும் பண்புகள் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயம் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆய்வுகள் படி, சின்ன வெங்காயம் சாற்றை தொடர்ந்து குடித்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது. அதாவது இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கு உதவுவதாக கண்டறிந்துள்ளன.
சுகரை கட்டுப்படுத்த வெங்காயம் எப்படி உதவும்?
சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெங்காயம் அருமருந்தாகும். வெங்காய சாற்றில் இருக்கும் புரோபில் என்ற பண்பு குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
பிற நன்மைகள்:
1. ஜீரணத்தை மேம்படுத்த உதவும்
வெங்காயத்தில் உள்ள ப்ரீ பயாடிக் எனும் பண்புகள் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக ஜீரணத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்யும். இதனால் வளர்ச்சியை மாற்றம் மேம்படும்.
2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெங்காயத்தில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நிறைய உள்ளதால் இவை இரண்டும் ஒன்று சேர்ந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனையை குணமாக்கும்.
எப்படி எடுத்துக் கொள்ளணும்?
5-7 சின்ன வெங்காயம் அல்லது அரை பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு, சீரகம் மற்றும் பிங்க் சால்ட் ஒரு சிட்டிகை, 2 ஸ்பூன் மிளகு, நான்கு புதினா இலைகள் கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி மதிய உணவுக்கு பிறகு குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நினைவில் கொள் :
வெங்காயத்தை நீங்கள் சாறாக குடிக்க விரும்பவில்லை என்றால், தினமும் கொஞ்சமாக சின்ன வெங்காயத்தை பச்சையாக கூட சாப்பிடலாம். இதே நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் சுகர் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது.
குறிப்பு : மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் முயற்சிக்க வேண்டாம்.
