- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Onion Juice For Hair Growth : வெங்காய சாறு முடியை வளர்க்குமா? இப்படி யூஸ் பண்ணுங்க
Onion Juice For Hair Growth : வெங்காய சாறு முடியை வளர்க்குமா? இப்படி யூஸ் பண்ணுங்க
தலைமுடிக்கு வேகமாக வளர வெங்காய சாற்றை பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் ஆண் பெண் என இருவரும் முடி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அதாவது முடி உதிர்தல், முடி உடைதல், முடி வறட்சி ஆகுதல் என பல வகையான முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. முடி வளர்ச்சியை தூண்டவும், முடி சார்ந்த பல பிரச்சனைகளை தடுக்கவும் பலர் இயற்கை வைத்திய முறைகளை தான் பின்பற்றி வருகின்றனர். அதன்படி முடி ஆரோக்கியமாக இருக்க வெங்காய சாறு சிறந்த தேர்வாகும்.
உண்மையிலேயே வெங்காயச் சாறு முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இது முடி உதிர்வதை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு வெங்காய சாற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதற்கான சரியான முறை தெரிவதில்லை. எனவே முடி வளர்ச்சிக்கு வெங்காய சாற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெங்காய சாறு
பொதுவாக பெரும்பாலானோர் வெங்காயத்திலிருந்து சாற்றை எடுத்த பிறகு உடனே தலையில் தடவுகிறார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது வெங்காயச்சாற்றை சுமார் 72 மணி நேரம் புளிக்க வைத்து பிறகுதான் தடவ வேண்டும்.
எப்படி பயன்படுத்தணும்?
தலைமுடியில் வெங்காய சாற்றை தடவும் முன் முதலில் உங்களது உச்சம் தலையை நனைத்து கொள்ளுங்கள். இப்போது புளித்த வெங்காய சாற்றை தலையில் தடவி சுமார் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முடியை கட்டி ஷவர் கேப்பால் மூடி வைக்க வேண்டும். 30-60 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி பயன்படுத்தினால், நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.