இனி உணவுக் கோளாறு பிரச்னையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..!!

புளோரிடா பல்கலைக்கழகச் சேர்ந்த நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை உணவுக் கோளாறுகளுக்குப் பின்னால் இருப்பதாகக் தெரிவித்துள்ளது.
 

eating disorder Don't take it lightly

உண்ணும் கோளாறு அல்லது உணவுக் கோளாறு என்பது இன்றைய தலைமுறையினர் பலரிடம் காணப்படும் ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் வரை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் உணவுக் கோளாறு தொடர்பாக சமீபத்தில் ஆய்வை மேற்கொண்டனர். அதில், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகியவை உணவுக் கோளாறுகளுக்குப் பின்னால் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உண்ணும் கோளாறின் அறிகுறிகளில் ஒன்று, ஒருவரின் சொந்த உடல் உருவத்தில் அதிக அக்கறை காட்டுவது. அதிக எடை காரணமாக தாழ்வு மனப்பான்மை உணவு உண்ணும் கோளாறுக்கு வழிவகுக்கும்

அதாவது, உடல் எடையை குறைப்பதற்காக, நீங்கள் உங்கள் உணவில் தளர்வாக இருப்பீர்கள், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பீர்கள். இந்த வகையான உணவுக் கோளாறு கல்லீரல், இதயம் மற்றும் எலும்புகள் போன்ற உடலின் பல்வேறு பாகங்களை மோசமாக பாதிக்கும். இது மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிலர் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் ஏற்படும் போது அதிகமாக சாப்பிடுவார்கள். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. இதன்காரணமாக உடல் பருமன் அல்லது வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். ஒழுங்கற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை அனைத்தும் செரிமான செயல்முறையை பாதிக்கலாம். என்ன சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். வாயு, வீக்கம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் பசியின்மை ஆகியவை செரிமான பிரச்சனைக்கான முக்கிய அறிகுறிகளாகும். 

அத்திப்பழம் ஆரோக்கிய நன்மைகள்- அறிந்ததும்..!! அறியாததும்..!!

சரியான நேரத்தில் சரியான அளவு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதே இதற்கான வழி. இதற்கு, வைட்டமின்கள் மற்றும் பிற ஆண்டி ஆக்சிடண்டுகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் உணவில் நீங்கள் விரும்பும் அளவுக்கு ஆரோக்கியமான கொழுப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் முக்கியம்.

மன அழுத்தத்தை சமாளிக்க வழிகளை பின்பற்றவும். யோகா மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். இவற்றுடன் புகைபிடித்தல், இரவில் தாமதமாக உணவு உண்பது போன்ற கெட்ட பழக்கங்களையும் கைவிடுவது அவசியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios