Gym Owner Heart Attack: ஷாக்கிங் நியூஸ்! ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி! மாரடைப்பால் உயிரிழந்த உரிமையாளர்!
சேலத்தில் ஜிம் உரிமையாளர் ஒருவர் உடற்பயிற்சிக்குப் பின் நீராவி குளியலறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அதிக அளவில் உடற்பயிற்சி மற்றும் ஸ்டீராய்டு எடுத்து கொள்வதன் காரணமாகவும் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கோட்டை அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மஹாதிர் முஹமது (36). இவர் ஜிம் உரிமையாளராக இருக்கிறார். வழக்கம் போல நேற்று இரவு சுமார் 7 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் நீராவியில் குளிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. தாய் அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜிம்முக்கு சென்று பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் சொன்ன ஒற்றை வார்த்தை! அதிருப்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்தடுத்து வந்து விழும் கேள்வி!
அப்போது, குளியல் அறையில் தண்ணீர் சத்தம் கேட்டதால் அங்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு பார்த்துள்ளனர். அப்போது காதில் ரத்தம் வழிந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மஹாதிர் முஹமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: TNPSC: தேர்வர்களுக்கு குட்நியூஸ்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
இதனிடையே உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் ஒரு நாளைக்கு 3 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்து வந்ததாக அவரின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.