குளிர் காற்று வீசும் போது ஏற்படும் காது வலியை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

தற்போது குளிர்காலம் என்பதால் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, குளிர்ந்த காற்று வீசுவதால் காது வலி பிரச்சினையை பலரும் அனுபவிக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் காது வலியை ரொம்பவே அவதிப்படுகிறார்கள். குளிர்ந்த காற்றால் காது வலிப்பது ஏன்? இதை குணமாக்க சில எளிய வீட்டு வைத்திய முறைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

குளிர்காலத்தில் காது வலி வர காரணம் என்ன?

யூஸ்டேஷியன் என்னும் குழாய் தான் குளிர்ந்த காற்று வீசும் போது காது வலிப்பதற்கும் முக்கிய காரணமாகும். இந்த குழாய் தான் நம் மூக்கு மற்றும் காதை இணைக்கிறது. குளிர்காலத்தில் அதிகப்படியான காற்று மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து விடும். வறண்ட காற்றின் காரணமாக இந்த குழாயானது மூடிக்கொள்ளும். இதனால் காற்று செல்ல முடியாமல் போவதால் காது சவ்வுகள் இழுக்கப்பட்டு வலியை அதிகமாக ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் மற்ற பாகங்களில் கொழுப்பு இருப்பது போல காதுகளில் அது கிடையாது. எனவே குளிர்ந்த காற்று செல்லும் போது காது வலி ஏற்படுகிறது. இதுதவிர அதிகப்படியான சளி, சைனஸ் பிரச்சனை, தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் இருந்தாலும் காது வலி அதிகமாக ஏற்படுகிறது.

காது வலியை தவிர்க்க என்ன செய்யலாம்?

- குளிர் காற்றால் காது வலி ஏற்படுவதை தவிர்க்க வீட்டை விட்டு வெளியே செல்லும்போததெல்லாம் காதுகளை மூடும் குல்லா அணிந்து செல்லவும். இதனால் குளிர்ந்த காற்று காதுக்குள் நுழைவது தடுக்கப்படும். காது வலியும்.

- குளிர்க்காலத்தில் வெளியே சென்று வந்ததும் ஆவி பிடிப்பது நல்லது. சூடான காற்றானது மூக்கின் வழியாக சென்றால் வலியிலிருந்து நிவாரணம் வழங்கும். இதை வாரத்திற்கு 2 முறை செய்வது நல்ல சிறந்தது.

- குளிர் காற்றால் ஏற்படும் காது வலியை குணமாக்க கல் உப்பை சூடாக்கி அதை ஒரு துணியில் கட்டி காதில் வெளிப்புறங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு படுக்க வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

- காது வலியை குறைக்க நல்லெண்ணையை லேசாக சூடு படுத்தி காதில் ஒரு சொட்டு விடவும். இதனால் காது வலி குறையும்.

மேலே சொல்லப்பட்ட வீட்டு வைத்தியங்கள் முயற்சித்தும் காது வலி குறையவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.