காது வலிக்கு தீர்வு

மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்தபிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. 

அதேபோல, விழிக்கும்போது முதலில் செயல்படத்தொடங்கும் புலனும் காதுதான். சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை. நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது. 

காது வழியாக நாம் சத்தத்தை கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகளும் சத்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

காது என்பது மனிதனுக்கு ஒலியை உணர வைக்கும் ஒரு முக்கிய உறுப்பாகும், காது சம்மந்தமாக பலருக்கு பல பிரச்சனை ஏற்படலாம். அதில் பொதுவான ஒரு பிரச்சனை என்னவென்றால் காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கு! 

இப்படி அழுக்கு அதிகம் சேர்வதால் காது அடைப்பு, காது வலி போன்ற தொல்லைகள் ஏற்படும்.

சரி, காதில் உள்ள அழுக்கை எளிதாக வெளியேற்ற ஒரு வழி உள்ளது தெரியுமா? 

வழி:

ஆல்கஹால் கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் வினீகர் (vinegar) கொஞ்சம் சேர்த்து சில சொட்டுகள் காதின் உள்ளே ஊற்றினால் காதின் அழுக்குகள் வெளியேறி விடும். 

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மருத்துவத்தை நாமே செய்யகூடாது மருத்துவர்கள் மூலம்தான் செய்து கொள்ள வேண்டும்.