- Home
- உடல்நலம்
- Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
30 வயதிற்கு பிறகு சில விஷயங்களை செய்தால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

Things To Avoid In Your 30s
பொதுவாக 30 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் நடக்கும். எனவே, இதுவரை செய்த சில விஷயங்களை இந்த வயதிற்கு பிறகு செய்வதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் உடல் ஆரோக்கியமாக மோசமாக பாதிக்கப்படும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கம்மியாக தூங்குவது!
நாம் நீண்ட நாள் ஆரோக்கியத்துடனே இருக்க கட்டாயம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் மோசமான பல பிரச்சனைகள் வரும். குறிப்பாக மன அழுத்தம், இதய நோய் என பல பாதிப்புகள் உண்டாகும்.
அதிகமாக சிந்திப்பது :
பொதுவாக 30 வயதிற்கு பிறகு மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். காரணம் பொருளாதார ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனாலேயே நம் அனைவரிடமும் மன அழுத்தம் மற்றும் அதிகமாக யோசிக்கும் பிரச்சனை இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக யோசிப்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, அதிகமாக யோசித்து உடலை கெடுக்காதீர்கள்.
ஜங்க் ஃபுட்கள் :
30 வயதிற்கு பிறகு உலக விஷயத்தில் கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். எனவே இந்த வயதிற்கு பிறகு ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விடுங்கள். அதுபோல பேக்கரி உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், இனிப்புகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
உடல் செயல்பாடுகள் இல்லாமை :
நீங்கள் 30 வயதிற்கு பிறகு எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது அவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக 10 நிமிடங்களாவது நடக்கவும். அதுபோல தினமும் காலை ஏதாவது ஒரு எளிய உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உடல் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்.
மதுவை நிறுத்து!
30 வயதிற்கு பிறகு நீங்கள் குடிப்பதை நிறுத்தாவிட்டால் உங்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே மதுவை குடிப்பதை தவிர்க்கவும்.
மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் கைவிட்டால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்

