Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கும் காது வலிக்கு வீட்டு வைத்தியம்…

Remedy for ear pain
remedy for-ear-pain
Author
First Published Apr 13, 2017, 1:58 PM IST


 

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று.

இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம்.

அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது. இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது.

மேலும் இந்த காதுவலி போக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும்.

1.. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.

2.. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும்.

3.. தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.

4.. கொஞ்சம் நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும்.

5.. சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சலும் அகலும்.

6.. கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios