கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதோடு உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் கிடைப்பதற்கும், கோடை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடவும் முக்கியமான 6 பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பழங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்து, செரிமானத்தை அதிகரிக்க செய்யும். இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் வெப்பம் மற்றும் பருவகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கோடையில் எந்தெந்த பழங்களை மிஸ் பண்ணாம கண்டிப்பாக சாப்பிட முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் நமது உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. வெயில் நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்களை பற்றி இப்போது பார்க்கலாம். கோடை காலம் வந்துவிட்டாலே உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். பழங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும் செரிமான அமைப்பையும் பலப்படுத்தும். கோடையில் பழங்களை சாப்பிடுவது வயிற்றை லேசாக வைத்து, உடல் எடையை குறைக்க உதவும். பழங்கள் நீரிழப்பில் இருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இந்த பழங்களை சாப்பிடுவதால் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். பருவகால நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கலாம்.
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் :
தர்பூசணி:
கோடையில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் உள்ளன. இதை சாப்பிடுவதால் உடலுக்கு நீர் சத்து கிடைக்கிறது. வெப்பத் தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். முடி வேகமாக வளரும்.
மாம்பழம்:
கோடையில் பலரும் மாம்பழம் சாப்பிட விரும்புவார்கள். இதில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை அதிக அளவில் உள்ளன. இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான அமைப்பையும் பலப்படுத்தும். கோடையில் இதை சாப்பிடுவது வெப்ப பக்கவாதத்தை தடுக்கும். உடல் எடை குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க: பாலக் ரவை இட்லி...எலும்புகளை இரும்பு போல் ஆக்கும் சூப்பர் உணவு
முலாம்பழம்:
கோடையில் முலாம்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். செரிமான அமைப்பும் வலுவடையும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, எலும்புகளையும் பலப்படுத்தும்.
திராட்சை:
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த திராட்சை உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதன் மூலம் கோடையில் தாகம் குறையும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். திராட்சை சாப்பிடுவது கோடையில் ஏற்படும் சோர்வை போக்கும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். திராட்சையில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரஞ்சு, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். ஆரஞ்சு சாறு குடிப்பது இந்த கோடை பழத்தை அனுபவிக்க சிறந்த வழியாகும்.
மேலும் படிக்க: ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா... வீட்டிலேயே செய்யும் முறை
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் 96% தண்ணீர் உள்ளது. இதை பச்சையாக ஒரு சிட்டிகை கருப்பு உப்புடன் சாப்பிடலாம். அல்லது சுவையான சாலட்டாக செய்து சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வெள்ளரிக்காயை கண்களில் வைத்தால், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கருவளையங்கள் குறையவும் உதவும்.
இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டு கோடை வெயிலை சமாளிக்கலாம்.
