Signs Of High Cholesterol : உங்களது உடலில் இந்த 5 இடத்தில் வலி வந்தால் உடம்பு கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரால் என்றதும் நம் அனைவருடைய மனதில் தோன்றும் முதல் விஷயம் என்னவென்றால், அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதுதான். உண்மையில் கொலஸ்ட்ரால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க தான் உதவுகிறது. ஆனால் அதன் அளவு அதிகரிக்க தொடங்கினால் அது இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது சில அறிகுறிகள் தெரியும் தெரியுமா? அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். எனவே இந்த பதிவில் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்பதை காட்டும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள்:
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் பல உள்ளன அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது அதிகமான எடை புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவை ஆகும். மற்றொரு காரணம் என்னவென்றால், மரபணு ரீதியாகவும் ஒரு சிலருக்கு கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கும். ஆன இதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.
இதையும் படிங்க: உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்:
1. ஒரு நபருக்கு கொலை உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றால் அது அவரது தோலில் தான் தெரியும். ஆம், அதிக கொழுப்பு இருந்தால் தோலில் மஞ்சள் புள்ளிகள் அல்லது கட்டிகள் உருவாகும். அவை பெரும்பாலும் கண்களை சுற்றி அல்லது முழங்கை முழங்கால்களில் தான் இருக்கும்.
2. அதுபோல சில அறிகுறிகள் கை, கால்களிலும் தெரியும். அதாவது கொலஸ்ட்ரால் உடலில் குவிந்தால், தமனிகள் குறுகி ரத்த ஓட்டமும் குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக எந்த ஒரு உடல் செயல்பாடுகள் செய்யும்போதும் கை, கால்கள் கூச்ச உணர்வு கால், விறைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
3. அதிக கொலஸ்ட்ரால் செரிமான அமைப்பிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் பித்தப்பையில் கற்கள் உருவாகத் தொடங்கும். மேலும் வயிற்றின் மேல் வலது பகுதியில் வலியை ஏற்படுத்தும்.
4. உடலில் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளில் பிளேக் குவிய தொடங்கும் மற்றும் ரத்த ஓட்டமும் தடைபடும். இதன் காரணமாக மார்பு வலி ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துக் கொழுப்பின் பொதுவான அறிகுறியானது மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் தான்.
5. பிளேக் காரணமாக தமனி வெடித்தால் அல்லது அடைப்பட்டால் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு பக்கவாதத்தை ஏற்படுத்தும். பக்கவாதம் வந்தால் உடல் மரத்து போகும், பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.
இதையும் படிங்க: காபி குடித்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? உண்மை என்ன?
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது எப்படி?
- உணவில் நிறைவுற்றுக் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும். அதுபோல பதப்படுத்தப்பட்ட மற்றும் வருத்த உணவுகளில் இருந்து விலகி இருக்கவும்.
- முக்கியமாக உங்களது உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஆரோக்கியமான கொழுப்பு என்பதால், இது கெட்ட கொழுப்பை குறைக்க தான் உதவும்.
- உணவில் கரையக்கூடிய நார்ச்சத்தின் அளவை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
- இது தவிர தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். சிறிதளவு எடை குறைந்தால் கூட கொழுப்பின் அளவு கணிசமாக மேம்படும்.
- நீங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க தான் செய்யும்.
