MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!

உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!

 Lifestyle Changes to Lower Bad Cholesterol : உங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 14 2025, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!

உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!

நம்முடைய உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்பு இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொழுப்பு இருப்பது மிகவும் அவசியம். மேலும் இது இதயத்திற்கு ரொம்பவே அவசியம். அதே நேரத்தில் அதிக அளவு கெட்ட கொழுப்பு அதாவது, இது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்க தொடங்கும் போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். 

25
உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க

உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க

நிபுணர்களின் கூற்றுப்படி, இன்றைய காலகட்டத்தில் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள் ஆகியவைதான். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிப்பதை சுலபமாக தடுத்துவிடலாம் மற்றும் நோய்களின் அபாயத்தையும் குறைத்து விடலாம். அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

35
உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க செய்ய வேண்டிய 7 விஷயங்கள்:

உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க செய்ய வேண்டிய 7 விஷயங்கள்:

நெய் : பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் உங்களது உணவில் நெய் அல்லது குளிர்ந்த அழுத்தப்பட்ட எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

நார்ச்சத்து உணவுகள் : உங்களது உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.  காய்கறிகள், பழங்கள் ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை குறைக்கும்.

இதையும் படிங்க:  காபி குடித்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? உண்மை என்ன?

45
சாப்பிட்ட பிறகு நடக்கவும் :

சாப்பிட்ட பிறகு நடக்கவும் :

சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். எனவே சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது உடலில் ரத்த சர்க்கரை அளவை சமன் செய்து கொழுப்பு சேருவதை குறைக்கிறது.

உண்ணாவிரதம் இருங்கள் : வாரத்திற்கு 1-2 முறை உண்ணா விரதம் இருங்கள். அதுவும் 12-14 மணி நேரம். இது கொழுப்பு வளர்ச்சியை மாற்றத்தையும், நல்ல கொழுப்பின் அளவையும் மேம்படுத்த உதவுகிறது.

இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

55
புகை பிடிக்காதே!

புகை பிடிக்காதே!

உங்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் இந்த பழக்கம் நுரையீரலில் மோசமான விரைவில் ஏற்படுகின்றது. முக்கியமாக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்.

நட்ஸ்கள் : உங்களது உணவில் ஊற வைத்த நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved