காபி குடித்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? உண்மை என்ன?
Coffee And Cholesterol : தொடர்ந்து காபி குடித்து வந்தால், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

காபி குடித்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? உண்மை என்ன?
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களால், நமது ஆரோக்கியமானது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. அதிகரித்து வரும் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக நாம் டீ மற்றும் காபி குடிப்பதை நமது வழக்கத்தில் ஒரு பகுதியாக மாற்றி விட்டோம். முக்கியமாக இவை இரண்டும் பலருக்கும் பிடித்த மற்றும் பிரபலமான காலை பானங்களில் ஒன்றாகும். குறிப்பாக சிலருக்கு காபி என்றாலே அலாதி பிரியம். அதனால் அவர்கள் அடிக்கடி காபி குடிப்பார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு சில நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் தெரியுமா?
காபி , கெட்ட கொலஸ்ட்ரால்
ஆம், காபி தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளன. இதனால்தான் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பது தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே, காபி கொழுப்பில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது நம்முடைய உடலில் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருள் ஆகும். நம்முடைய உடலில் ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்ரோஜன், வைட்டமின் டி போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியம். மேலும் இது உணவை ஜீரணிக்க உதவி செய்கிறது. சீஸ், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்ற உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகமாகவே உள்ளன. கொலஸ்ட்ரால் நம்முடைய உடலுக்கு கெட்டதில்லை என்றாலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால், குறிப்பாக ட்ரான்ஸ்போலுப்பை எடுத்துக் கொள்ளும்போது அது நம்முடைய உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
காபிக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு:
காபி பற்றி பேசினால் அது உடலில் கொழுப்பின் அளவை நேரடியாக அதிகரிக்காது. ஆனால் அது மறைமுகமாக விளைவை ஏற்படுத்தும். ஆம், காபியில் உள்ள காஃபின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கார்டிசோலின் அளவை அதிகரிக்கும் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். கூடுதலாக, காஃபின் இன்சுலின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும், நல்ல கொழுப்பின் அளவு குறையும்.
காபி கெட்ட கொழுப்பை அதிகரிக்குமா?
காபியில் உள்ள சில கூறுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன அதிலும் குறிப்பாக காபியில் காணப்படும் டைட்டர்ஸ் பின்ஸ் என்ற தனிமம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை உடைக்க செயல்படும் தனிமங்கள் உருவாவதை தடுக்கும் இதன் காரணமாக உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். வடிக்கப்படாத காபி மற்றும் பிரண்ட்ஸ் காபி போன்றவை கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். அதே சமயம் உடனடி காபி மற்றும் வடிகட்டிய காபி கொழுப்பை பாதிக்கும் வாய்ப்பை குறைக்கும்.
இதையும் படிங்க: காபி, டீ குடிப்பது புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் : புதிய ஆய்வில் தகவல்..
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு 5 காபி குடித்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவானது 6 முதல் 8 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளன எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபி குடித்தால் ஆரோக்கியத்திற்கு எந்தவிதமான தீங்கும் விளைவிப்பதில்லை. ஆனால் இதைவிட அதிகமாக குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இதையும் படிங்க: சர்க்கரை இல்லாத காபி காலையில குடிச்சி தான் பாருங்களே; 'இந்த' நன்மைகள் கிடைக்கும்!
கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.
- தினமும் சுமார் 30-45 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்க்கவும்.
- தினமும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிடுங்கள்.
- முக்கியமாக அளவுக்கு அதிகமாக காபி குடிக்க வேண்டாம்.