Asianet News TamilAsianet News Tamil

இளம் வயதிலே ஏற்படும் மூட்டு வலிக்கு இதுவும் ஒரு காரணம் தான்..!!

உடலில் யூரிக் அமிலத்தின் திரட்சி அதிகரிக்கும் போது, முழங்கால் வலி மற்றும் மூட்டு வலி காணப்படுகிறது. இளம் வயதிலேயே முழங்கால் வலி வந்தால், யூரிக் அமிலம் அதிகமாகிறது என்று அர்த்தம்.
 

5 food habits that could increase uric acid in body
Author
First Published Dec 9, 2022, 5:36 PM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் குளிர்பானங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அவற்றைக் குடிப்பது சிலருக்கு ஒரு வேலை, மற்றவர்களுக்கு ஒரு பழக்கம். இந்த பானங்களில் சர்க்கரை அதிகம். இதன்மூலம் உடலில் யூரிக் அமிலத்தின் இருப்பு அதிகமாகிறது. நமது உடலில் இந்த அமிலம் எப்போதும் சரியான விகதத்தில் தான் இருக்க வேண்டும். யூரிக் அமிலம் என்பது உடலில் காணப்படும் தேவையற்ற அல்லது அழுக்குப் பொருளாகும். இது உடலில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது தனிச்சிறப்பு. நாம் உண்ணும் உணவின் அடிப்படையில் இது உடலில் சேரும். இது அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ பல்வேறு உடல் உறுப்பு பாதிப்புகள் ஏற்படும். ஏற்கனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக சர்க்கரை உட்கொள்வது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்பானம் அருந்த வேண்டாம். இதுமட்டுமின்றி, வேறு சில பொருட்களை உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலம் பிரச்சனை அதிகரிக்கிறது. அவற்றையும் தவிர்ப்பது நல்லது. 

பியூரின் நிறைந்த உணவு யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது. அதன்காரணமாக உடலில் ரத்தத்தையும் சிறுநீரையும் அமிலமாகிவிடுகிறது. இதையடுத்து மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளிட்ட பல வகையான பிரச்சனைகள் தோன்றுகின்றன. பிரச்னையில் தீவிரத்தை பொறுத்து ஒருசிலருக்கு கீல்வாதம் பாதிப்பும் ஏற்படுகிறது. அதனால் யூரிக் அமிலம் இருப்பை சரியான விகிதத்தில் பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகளை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

மது

ஆல்கஹாலில் பியூரின் உள்ளடக்கம் அதிகம். இது உடலில் யூரிக் அமிலத்தையும் அதிகரிக்கிறது. ஆய்வுகளின்படி, பீரில் அதிக அளவு பியூரின் உள்ளது. அதனால் யூரிக் அமில அதிகரிப்பு பிரச்னை இருப்பவர்கள், நிச்சயமாக மதுப் பழக்கத்தை உடனடியாக கைவிடுவது மிகவும் நல்லது.

இறைச்சி

சிவப்பு இறைச்சியை அதிகளவில் உட்கொள்வதன் காரணமாகவும், உடலில் யூரிக் அமிலம் அதிகமாகிறது. இதில் அதிகளவில் பியூரின் காணப்படுகிறது. இதனால் நீண்ட காலமாக சிவப்பு இறைச்சியை உட்கொள்பவர்களின் இரத்தத்தில் பியூரின் கலந்துவிடும். இதையடுத்து உடலை முறையாக பராமரிக்கவில்லை என்றால், சிறுநீரக கற்கள் உருவாகி வேலையை காட்டத் துவங்கும்.

ரோல்பிளே உடலுறவு மூலம் உறவில் புதுமையை பேணும் காதலர்கள்..!!

கடல் உணவுகள்

சில கடல் உணவுப் பொருட்களிலும் பியூரின் அதிகளவு உள்ளது. டூனா மற்றும் சால்மன் போன்ற மீன்களில் பியூரினின் இருப்பு பெரியளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுவதால், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகிறது. அவற்றின் தொடர்ச்சியான நுகர்வு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காய்கறிகள்

காலிஃபிளவர், கீரை மற்றும் காளான்களில் ப்யூரின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது, இது யூரிக் அமிலத்தின் அளவையும் அதிகரிக்கிறது. இவை மது, குளிர்பானங்கள் அளவுக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், குறிப்பிட்ட காய்கறிகளை தொடர்ந்து உட்கொள்வதன் காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு சிறிதளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios