ஹைதராபாத் என்றாலே அனைவருக்கும் பிரியாணி தான் நினைவிற்கு வரும். ஆனால் அந்த பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பகாரா ரைஸ் ஒரு முறை சுவைத்து பாருங்க. அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு அதன் சுவை உங்கள் நாக்கிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்.
ஹைதராபாத் உணவுகளில் பகாரா ரைஸ் ஒரு அற்புதமான உணவு ஆகும். மசாலா, மணமுள்ள தேங்காய் பால் மற்றும் நெய்யின் கலவையில் தயாராகும் இந்த ரைஸ், சாதாரண பிரியாணிக்கு மாற்றாக இருக்கும். எந்த கறி அல்லது கிரேவியுடன் சேர்த்தாலும், இந்த பகாரா ரைஸ் அசத்தலான சுவையை தரும். பிரியாணி பிடிக்காதவர்களுக்கு கூட இந்த பகாரா ரைஸ் கண்டிப்பாக பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிறிய துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
ஸ்டார் அன்னாசிப்பூ – 1
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
தேங்காய் பால் – 1/2 கப்
தண்ணீர் – 3 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
இதெல்லாம் உங்களிடம் உள்ளதா? அப்படின்னா நீங்கள் தனிமையால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்
செய்முறை:
- பாசுமதி அரிசியை 20 நிமிடம் நீரில் ஊறவைத்து வடித்து வைக்கவும்.
- கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தழைப்பூ, பெருங்காயம், சோம்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- அரிசியை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். தண்ணீர் கொதிக்கும் போது அடுப்பை சிம்மராக வைத்து மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
- சுவையான ஹைதராபாத் பகாரா ரைஸ் தயார். சைட் டிஷ்ஷாக கறி அல்லது கிரேவியுடன் பரிமாறலாம்.
சமையல் குறிப்புகள்:
- அரிசியை கூடுதல் நேரம் ஊற வைக்க வேண்டாம். இல்லையெனில் அது ஒட்டிக்கொள்ளும்.
- கிராமத்து மணம் சேர்க்க நெய் அதிகமாக பயன்படுத்தலாம்.
- தேங்காய் பால் சேர்ப்பதால், சாதம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
கலோரிகளை விசுக்குன்னு பொசுக்கி.. வெயிட் பாடியை ஸ்லிம்மாக்க.. சிம்பிளான டிப்ஸ்!
பகாரா ரைஸின் சிறப்பு:
- ஹைதராபாத் உணவுப் பாரம்பரியத்தில் முக்கியமான இடம் பெறும் ரைஸ் வகை.
- இதனை எந்த மசாலா கிரேவியுடனும் கூடிய சுவையாக பரிமாறலாம்.
- குழம்பு, சிக்கன், மட்டன், அல்லது சாதாரண தயிர் பச்சடி உடன் நன்றாக இருக்கும்.
- பகாரா ரைஸ், பெரும்பாலும் ஹைதராபாத் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பிரபலமானது.
- தேங்காய் பால் மற்றும் நெய் சேர்ப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
