Winter Health Tips: மழைக்காலத்தில் உஷார்.. மறந்து கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள் - ஹெல்த் டிப்ஸ்
மழைக்காலம் வந்தாலே நோய்களும் கூடவே எட்டிப்பார்க்கும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது எத்தனையோ நோய்கள் பாடாய் படுத்தி எடுக்கும். நோய்கள் வந்த பின்னர் மருத்துவர்களை நாடுவதை விட நோய்கள் வரும் முன்பாக என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை காலம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. புது வெள்ளத்தை காண மக்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். ஒருபக்கம் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலும் மழையும் மாறி மாறி வருவதால் பலருக்கும் உடல் ரீதியான தொந்தரவுகள் வந்து போகும். பெரும்பாலும் தண்ணீரின் மூலமாகத்தான் நோய்கள் எட்டிப்பார்க்கும் என்பதால் நான் தண்ணீரை காய்ச்சி குடிப்பது அவசியம்.
வெளி இடங்களில் தெருக்களில் விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள், கீரைகள் வாங்கி வந்தால் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி உபயோகப்படுத்துவது நல்லது. சாப்பிடும் முன்பாக கைகளை நன்றாக தேய்த்து கழுவுவது அவசியம்.
வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம். மஞ்சள் தூள், பனங்கற்கண்டு கலந்த மசாலா பால் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்கறிகள், சிறுதானியங்கள், கொள்ளு சூப் குடிப்பது நல்லது. மழை காலத்தில் மோர், தயிர் சாப்பிடலாம். இது வயிற்றுக்கு இதமாக இருக்கும் இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவும்.
பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சிகோங்க..
சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம் சத்து கிடைக்கும். இதன் மூலம் மழைக்காலத்தில் நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். பருவமழை காலத்தில் பழ ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது அவசியம்.
மழை காலத்தில் டீ தயாரிக்கும் போது இஞ்சி சேர்ப்பது அவசியம். அது சளி தொந்தரவுகளை குணப்படுத்தும். செரிமானத்திற்கு உதவும். எனவே காலை அல்லது மாலை நேரங்களில் இஞ்சி டீ தயாரித்து குடிக்கலாம். ஒமேகா கொழுப்பு அதிகம் உள்ள மீன் உணவுகள், உலர் பழங்களை சாப்பிடலாம்.
தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை... இந்த ரெண்டில் எது நல்லது? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
மழை காலத்தில் வெளியே போய் விட்டு வந்தவர்கள் நன்றாக கை, கால்களை தேய்த்து கழுவிவிட்டுதான் சாப்பிட உட்கார வேண்டும். கால்களின் மூலம் நுண்கிருமிகள் உடலுக்குள் பரவ வாய்ப்பு உள்ளதால் கால்களை கழுவி விட்டுதான் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.
கொசுக்களின் மூலம் அதிக அளவில் நோய்கள் பரவக்கூடும் எனவே வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.