தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை... இந்த ரெண்டில் எது நல்லது? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
Curd With Sugar Or Salt : தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை இந்த இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா?
தயிரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். தயிரில் நம் உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், போன்ற பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாகவே, பெரும்பாலானோர் கோடை காலத்தில் தான் தயிர் அதில் சாப்பிட விரும்புகிறார்கள். காரணம் உடல் சூட்டை தணித்து ஆரோக்கியமாக வைக்கும் என்பதால் தான். ஆனால், தயிரை கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி, எந்த பருவத்தில் சாப்பிட்டாலும் அது உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படாது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
இந்நிலையில், சிலர் தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவார்கள் இன்னும் சிலர் உப்பு கலந்து சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானதுதான். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். ஆனால், ஆரோக்கியம் என்று வரும்போது சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. எனவே தாமதிக்காமல் தயிர் உடன் சர்க்கரை அல்லது உப்பு இவை இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கோடையில் தயிர் உடனே புளிக்காமல் இருக்க நச்சுன்னு நாலு டிப்ஸ்!!
தயிர் மற்றும் உப்பு:
நீங்கள் உயரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், உப்பில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், அதை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருமளவில் அழித்துவிடும். மேலும், உப்பு சேர்க்கப்பட்ட தயிரை அதிகமாக சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும். எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல.
இதையும் படிங்க: கோடையில் தயிர் சாப்பிடுவது நல்லது தான்.. ஆனால் இவற்றுடன் சாப்பிட்டால் ஆபத்து!
தயிர் மற்றும் சர்க்கரை:
தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்பிற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், சர்க்கரை தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்காது மற்றும் வயிற்றில் உள்ள எரியும் உணர்வையும் தணிக்கும். அதுமட்டுமின்றி, இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் விரைவில் எடை அதிகரிக்கும். ஏனெனில், இது அதிக கலோரி உள்ளடக்கம் நிறைந்ததாக மாறும். முக்கியமாக, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தயிரை எப்படி சாப்பிட்டால் நல்லது?
தயிரில் சிறிதளவு உப்பு சர்க்கரை கலந்து சாப்பிட்டால் எவ்வித தீங்கும் இல்லை ஆனால் நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலோ அல்லது உடல் பருமனால் அவதிப்பட்டு இருந்தாலோ அது உங்களுக்கு சில பக்க விளைவுகளை உண்டாக்கும். எனவே, அவற்றை குறித்து கொஞ்சம் கவனமாக இருங்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உப்புக்கு பதிலாக சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D