பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சிகோங்க..
Papaya Benefits : நாளின் மிக முக்கியமான நேரம் காலை என்பதால் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பழங்களின் பட்டியலில், அப்படி நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றுதான் 'பப்பாளி'.
காலை நேரம் ஆரோக்கியத்தின் பார்வையில் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்களது நாளை ஆரோக்கியமான விஷயங்களுடன் தொடங்குங்கள். இதற்கு காலையில் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், ஆரோக்கியமான உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாளின் மிக முக்கியமான நேரம் காலை என்பதால் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நான் முழுவதும் உங்களை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் தெரியுமா? பழங்களின் பட்டியலில், அப்படி நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றுதான் 'பப்பாளி'.
பப்பாளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
பப்பாளி சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாகும். இதில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் லுடீன் போன்ற தனிமங்களும் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேலை செய்கிறது. எனவே, வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பப்பாளி இலை சாப்பிட்டால் டெங்கு குணமாகுமா? டெங்கு குறித்து 5 கட்டுக்கதைகள் நீங்கள் அறியாதவைஇதோ..!!
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்லது:
தினமும் காலை வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டு வந்தால் செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கும். மேலும், பப்பாளியில் அதிகளவு நார்சத்து இருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குவதுமட்டுமின்றி, உங்கள் வயிற்றை எந்தவித சிரமமும் இல்லாமல் தொடர்ந்து சுத்தம் செய்யும். மேலும், இந்த பழமானது அமிலத்தன்மை மற்றும் அஜீரண பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது.
2. உடல் எடையை குறைக்கும்:
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், தினமும் காலை வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடுங்கள். ஏனெனில், இதில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் பப்பாளி சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடுவது தடுக்கப்படும். மேலும், உங்கள் எடையையும் சுலபமாக குறைக்கலாம்.
இதையும் படிங்க: அசத்தலான சுவையில் பப்பாளி அல்வா...செய்முறை இதோ..!!
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே, இந்த பழத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு நோய்கள் மற்றும் தொற்று நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும். இது தவிர, இது உடலில் நச்சுத்தன்மையாக்குகிறது.
5. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
உங்களது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ பப்பாளியை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். ஏனெனில், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D