வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பாத வெடிப்பை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத வெடிப்பு என்பது ரொம்பவே மோசமான ஒன்றாகும். பாதங்களில் லேசாக வெடிப்புகள் தெரியும் போதே அதை சரி செய்துவிட்டால் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் நீர்சத்துக் குறைவு, உடல் பருமன், வெறும் காலில் நடப்பது, இரவு நேர வேலை, நீண்ட நேரம் மிக கடினமான தளங்களில் நிற்பது போன்றவையாகும். நம் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டும் நாம், நம் உடலை தாங்கும் பாதத்தின் மீதும் சிறிதளவாவது கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும். இதற்கு தினமும் சூடான நீரில் பாதத்தை கழிவு வந்தாலே பாதத்தில் வெடிப்பு ஏற்படாது தெரியுமா? சரி, இப்போது இந்த பதிவில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து பாத வெடிப்புகளை குணப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
குதிகால் வெடிப்பு போக சிம்பிள் டிப்ஸ்:
1. மருதாணி இலைகளுடன் சிறிதளவு உருண்டை மஞ்சள் கிழங்கை இடித்து சேர்த்து நன்கு மையாக அரைத்து அதை பாத வெடிப்புகள் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் விரைவில் குணமாகும்.
2. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் உடன் சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து அதை பாத வெடிப்பு இடங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.
3. சின்ன வெங்காயத்தை நன்கு மையாக அரைத்து அதனுடன் சிறிது அளவு மஞ்சள் தூள் கலந்து அதை வெடிப்பு மீது பற்று போல போட்டு சிறிது நேரம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் வெடிப்பு மறைந்துவிடும். பாதமும் மிருதுவாகும்.
4. தினமும் இரவு தூங்கும் முன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதை பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் வெடிப்புகள் மறையும். பாதமும் மென்மையாகும்.
5. விளக்கு எண்ணெய் குளிர்ச்சி தன்மை உடையது எனவே தினமும் இரவு தூங்கும் முன் பாதத்தில் இதை சிறிதளவு தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
6. ஒரு வாளியில் சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் உங்களது பாதத்தை சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு பாதங்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின் தேங்காய் எண்ணெய் தடவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புகள் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.
7. ஒரு வாளி சூடான நீரில் கல் உப்பு மற்றும் சிறிதளவு ஷாம்பு சேர்த்து அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்து பிறகு மசாஜ் செய்ய வேண்டும். பின் பாதங்களை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி அதில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு மறையும். மேலும் பாதத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் வறட்சி நீங்கி பாதம் மென்மையாகும்.
8. வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை பாதத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு சூடான நீரில் கால்களை கழுவ வேண்டும். பிறகு பெட்ரோலியம் ஜெல்லை தடவி சாக்ஸ் போடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்பு மறையும். பாதமும் மென்மையாகும்.
நினைவில் கொள் :
- பாத வெடிப்பு உள்ளவர்கள் கடினமான செருப்புகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
- தினமும் இரவு தூங்குவதற்கு முன் பாதத்தில் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும்.
- பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மூடிய செருப்புகளை அணிவதுதான் நல்லது.
- அதிக உடல் எடை இருந்தால் அதை குறைக்கவும். மேலும் நீண்ட நேரம் நிற்க்க வேண்டாம்.
- பாதத்தில் இருக்கும் இறந்த சருமத்தை அகற்ற ப்யூமிக் கல்லை பயன்படுத்தலாம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு பாத விடுதி பிரச்சனை நீத நாட்களாக இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
- குதிகள் வெடிப்பு உள்ளவர்கள் வெள்ளரிக்காய், பழங்கள், இளநீர், வெண்ணெய், சுரைக்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
- பொறிக்கப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், மிளகாய், மிளகு, கடுகு, கடுகு எண்ணெய் ஆகியவை பாத வெடிப்பில் இன்னும் பிளவுகளை தூண்டி, வெடிப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
