Cracked feet: பாத வெடிப்பை சரிசெய்யும் கருப்பு உப்பு: எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
குதிகால் வெடிப்பு, வறட்சியின் காரணமாகத் தான் அதிகமாக ஏற்படுகிறது என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால், பலருக்கும் இள வயதிலேயே பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
நம்மில் சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். இதற்கு முக்கிய காரணம், சருமத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பது தான். சருமத்தைப் பாதுகாக்க பல இயற்கைப் பொருட்கள் உதவும் நிலையில், பலரும் இதுபற்றி அறியாமல் இருக்கின்றனர். தோல் தொடர்பான பாதிப்புகளில் குதிகால் வெடிப்பும் ஒன்றாகும். இந்த குதிகால் வெடிப்பு, வறட்சியின் காரணமாகத் தான் அதிகமாக ஏற்படுகிறது என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால், பலருக்கும் இள வயதிலேயே பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
குதிகால் வெடிப்பு
இரு கால்களின் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் அழகை கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்குகிறது. மேலும் குதிகால் வெடிபாபால், பாதங்கள் நன்றாக இறுகிப் போய் விடும். சரியான நேரத்தில் இதனைப் போக்க சிகிச்சை எடுக்கவில்லை என்றால், இது அதிகமாகி விடும். தொடக்கத்திலேயே பாத வெடிப்பை சரிசெய்ய முயற்சி செய்வது தான் நல்லது. சரும அழகு மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்கள் மற்றும் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. இதன் காரணமாக கால்களில் வறண்ட சருமம், பித்த வெடிப்பு, கால் ஆணி மற்றும் சொரசொரப்பான பாதம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
பாத வெடிப்பு வெறும் அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகவும் பார்க்க வேண்டும். தற்போது, அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய்வதனால் கால்களுக்கு அழகு சேர்கிறது. உடலில் உள்ள முக்கிய நரம்புகளின் இணைப்புகள், பாதங்களில் தான் இருக்கின்றன. இந்த நரம்புகளை அவ்வப்போது மசாஜ் செய்து தூண்டும் போது உடலும், மனதும் சேர்ந்து புத்துணர்ச்சி அடையும்.
சில சமயங்களில் தொற்று காரணமாகவும் பாதங்களில், வலியுடன் கூடிய வெடிப்புகள் இருக்கும். பாத வெடிப்பினால் ஏற்படும வலியை நீக்கவும் மற்றும் வெடிப்பை நீக்கவும் கருப்பு உப்பு மிகச் சிறந்த தீர்வை அளிக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்தினால் எளிய முறையில் குதிகால் வெடிப்பில் இருந்து உங்களால் விடுபட முடியும்.
கமகமக்கும் ஹெல்த்தி "நூடுல்ஸ் வெஜ் சூப்" ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!
கருப்பு உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு பக்கெட்டை எடுத்துக் கொண்டு, அதில் பாதி அளவு தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு கருப்பு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது பக்கெட்டில் உங்களின் இரு பாதங்களை வைத்துக் கொள்ளுங்கள். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பாதங்களை மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அடிக்கடி இப்படி செய்து வந்தால், பாத வெடிப்பின் காரணமாக ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு முற்றிலுமாக நிவாரணம் கிடைப்பதை உங்களால் உணர முடியும். இதுதவிர, கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றி இருக்கும் இறந்த செல்களை அழித்து, பாதங்களை மென்மையாக்கி விடும்.