Asianet News TamilAsianet News Tamil

கமகமக்கும் ஹெல்த்தி "நூடுல்ஸ் வெஜ் சூப்" ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

வாருங்கள்! சூப்பரான சுவையில் சத்தான வெஜிடேபிள் நூடுல்ஸ் சூப் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Noodles  Veg Soup in Tamil
Author
First Published Feb 12, 2023, 10:17 PM IST

சூப் போன்ற ரெசிபிக்களை குழந்தைகள் குடிக்க தயக்கம் காட்டுவார்கள்.அதே சூப்பினை அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் குடித்து முடிப்பார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகையில் ஒன்றான நூடுல்ஸ் வைத்து சூப் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் இதனை பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சூப்பை மாலை நேரங்களில் டீ மற்றும் காபிக்கு பதிலாக கூட செய்து அருந்தலாம்.

வாருங்கள்! சூப்பரான சுவையில் சத்தான வெஜிடேபிள் நூடுல்ஸ் சூப் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தேவையான பொருட்கள்:

  • கோதுமை நூடுல்ஸ் - 1 கப்
  • காய்கறிகள் -1/2 கப்
  • ( கேரட்-1/2, பீன்ஸ்-2, கேப்ஸிகம் -சிறிது, கோஸ் - சிறிது,
  • ஸ்வீட் கார்ன்- சிறிது ,பட்டாணி- சிறிது )
  • மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
  • பட்டர்-1 ஸ்பூன்
  • கார்ன் பிளார்-1 ஸ்பூன்
  • சோயா சாஸ் – ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • பூண்டு –1 பல்
  • ஸ்ப்ரிங் ஆனியன் – 1/2
  • மல்லித் தழை- சிறிது
  • உப்பு – தேவையான அளவு.

 

 

இப்படி "பன்னீர் நெய் ரோஸ்ட்" செய்து கொடுத்தா மிச்சமே இல்லாம சாப்பிட்டு முடிப்பாங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை சேர்த்து வேக வைத்து வெஜ் ஸ்டாக் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.

.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துவதக்கி விட்டு அதில் காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் அதில் மிளகுத்தூள்,வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை சூப்பில் ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பரிமாறினால் சூப்பரான ,சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios