- Home
- Tamil Nadu News
- Tomato - Onion Price Today : மலைபோல் குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி.! பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
Tomato - Onion Price Today : மலைபோல் குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி.! பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
சென்னை கோயம்பேடு சந்தையில் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரித்ததால், தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த விலை சரிவால் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி விலைகள் சரிவு.!
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலைகள் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளதால், வியாபாரிகளும் பொதுமக்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். குறிப்பாக, வெங்காயம் மற்றும் தக்காளி விலைகள் கடந்த சில வாரங்களாக உயர்ந்த நிலையில் இருந்தாலும், மழை குறைவதும் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரித்ததும் காரணமாக இப்போது விலை கட்டுக்குள் வந்துள்ளது.
இன்றைய தக்காளி வெங்காயம் விலை நிலவரம்
தற்போது, பெரிய வெங்காயம் கிலோவுக்கு 7 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சின்ன வெங்காயம் 30 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதால் மொத்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
தக்காளி விலை 1 கிலோக்கு 17 ரூபாயிலிருந்து 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்திருப்பதால் தக்காளி விலையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள், மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காய்கறிகளை அள்ளி செல்லும் பொதுமக்கள்
அதே நேரத்தில், மற்ற காய்கறிகளும் விலை குறைவால் சந்தையில் குவிந்துள்ளன. பச்சை மிளகாய் 15 ரூபாய்க்கு, பீட்ரூட் 20 ரூபாய்க்கு, உருளைக்கிழங்கு 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுரைக்காய் 25 ரூபாய்க்கு, பட்டர் பீன்ஸ் 68 ரூபாய்க்கு, அவரைக்காய் 70 ரூபாய்க்கு, முட்டைக்கோஸ் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றன. கேரட் 50 ரூபாய், காலிஃபிளவர் 20 ரூபாய் என விலை நிலைத்துள்ளது.
விலை இன்னும் சில நாட்களில் மேலும் குறையக்கூடும்
காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால், விலை இன்னும் சில நாட்களில் மேலும் குறையக்கூடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால், கோயம்பேடு சந்தையில் மக்களின் நடமாட்டம் கூடிவருகிறது. இல்லத்தரசிகள் பைபையாக காய்கறிகளை அள்ளிச்செல்லும் காட்சி சந்தைக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. விலை சரிவு பொதுமக்களின் குடும்பச் செலவில் ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.