MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புது வீடு, நிலம் வாங்க போறீங்களா? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. இனி அலைச்சல் இல்லை!

புது வீடு, நிலம் வாங்க போறீங்களா? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. இனி அலைச்சல் இல்லை!

TN Online Property Registration: தமிழகத்தில் புது வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்விதமாக ஆகஸ்ட் 17, 2026 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த முழு விபரங்களை பார்க்கலாம்.

3 Min read
Author : Rayar A
Published : Jul 07 2026, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TN Online Property Registration
Image Credit : AI

TN Online Property Registration

தமிழகத்தில் புதிய வீடு, நிலம் என சொத்து வாங்குபவர்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இனி பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலக வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிஜிட்டல் புரட்சியைத் தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இனி எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு
Image Credit : our own

இனி எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) என்ற புதிய இணையவழி நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் (24 x 7 x 365) எப்போது வேண்டுமானாலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையவழியாகத் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் 17-08-2026 முதல் அதிகாரப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் இது முதற்கட்டமாகப் பொருந்தும்?

இந்த புதிய ஆன்லைன் கட்டாய நடைமுறை முதற்கட்டமாகப் பின்வரும் இரண்டு முக்கியப் பிரிவுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது:

அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)

ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)

இதையும் படிங்க: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Related Articles

Related image1
மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!
Related image2
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
35
 புதிய ஆன்லைன் நடைமுறை எவ்வாறு செயல்படும்?
Image Credit : our own

புதிய ஆன்லைன் நடைமுறை எவ்வாறு செயல்படும்?

பிரத்யேக லாகின் வசதி: கட்டுமான நிறுவனங்கள் (Builders) மற்றும் நிலவிற்பனையாளர்கள் (Promoters) பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கென ஒரு தனித்துவமான லாக் இன் (Login) தாங்களே உருவாக்கி, ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

ஆவணங்கள் மேலேற்றம்: சொத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகளின் விபரங்களுடன் அவர்களின் அடையாள ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பயோமெட்ரிக் சரிபார்ப்பு: ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, விரல் ரேகை அல்லது விழித்திரை (Iris) ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் ஆதார் விபரங்கள் துல்லியமாகச் சரிபார்க்கப்படும்.

நேரில் ஒருமுறை கூட செல்ல வேண்டாம்: ஆன்லைன் மூலமாகவே உரிய கட்டணங்களைச் செலுத்தி, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஒருமுறை கூட நேரில் செல்லாமல் ஆவணங்களைத் தாக்கல் செய்து விடலாம்.

இதையும் படிங்க:வட்டிக்கு மேல் வட்டி! போஸ்ட் ஆபீஸில் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் ஐடியா.. FD vs RD எது பெஸ்ட்?

45
கூடுதல் விபரங்களுக்கான கால அவகாசம்
Image Credit : our own

கூடுதல் விபரங்களுக்கான கால அவகாசம்

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால், சார்பதிவாளர் இணையவழியில் கேட்கும் கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

டிஜிட்டல் சான்றிதழ் விநியோகம்: ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே அல்லது அடுத்த வேலை நாளுக்குள், சார்பதிவாளரின் மின்-கையொப்பத்துடன் (Digital Signature) கூடிய பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது ஆவணதாரருக்கு ஆன்லைனிலேயே அனுப்பி வைக்கப்படும்.

பதிவிறக்க வசதி: ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இந்த ஆவணங்களை, மக்கள் அடுத்த 60 நாட்கள் வரை எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

சட்டப்பூர்வ அங்கீகாரம்: இந்த டிஜிட்டல் பதிவுகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில், பதிவுச்சட்டம் 1908-ன் கீழ் வரும் விதி 32, 52 மற்றும் 69 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய இணையவழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பு உதவி மையம்: இத்திட்டம் தொடர்பாகப் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும், வழிகாட்டவும் பிரத்யேகமாக ஓர் உதவி மையம் (Help Desk) தனியாகச் செயல்படும்.

இதையும் படிங்க:Post Office Scheme: மாதம் ரூ.17,000 வருமானம் நிச்சயம்! மூத்த குடிமக்களுக்கான 'ஜாக்பாட்' திட்டம்!

55
ஆன்லைன் பத்திரபதிவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பக் கருவிகள்
Image Credit : our own

ஆன்லைன் பத்திரபதிவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பக் கருவிகள்

இந்த ஆன்லைன் பதிவு முறையைப் பயன்படுத்தப் பின்வரும் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகும்:

அதிவேக இணைய இணைப்பு (Internet Connection)

ஆதார் ஆணையத்தால் (UIDAI) அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 (L0 & L1) ரக விரல் ரேகை இயந்திரம் மற்றும் பயோமெட்ரிக் விழித்திரை கவரும் கருவி.

தரமான புகைப்படக்கருவி (Webcam).

இந்த திட்டம் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

இந்த அதிநவீன வசதியின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குச் சாதகமான மற்றும் வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பதிவு செய்ய முடியும். இதனால், குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் தினசரி நிலவும் கடுமையான கூட்ட நெரிசல் இனி கணிசமாகக் குறையும். மேலும், அலுவலகங்களுக்கு இடையேயான பணிச்சுமை சமமாகப் பிரிக்கப்பட்டு, பத்திரப் பதிவுப் பணிகள் மிக விரைவாக நடைபெறும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
முதல்வர் கரூருக்குச் செல்ல முடியாத அளவுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது!
Recommended image2
Now Playing
வயநாடு நிலச்சரிவின் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி…நூலிழையில உயிர் பிழைத்த மக்கள் !
Recommended image3
Now Playing
கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்
Related Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!
Recommended image2
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved