MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ் சொல்லியுள்ளது. இனி பட்டா தேடி வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்லது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Jul 04 2026, 06:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தானியங்கி முறையில் பட்டா மாறுதல்
Image Credit : AI

தானியங்கி முறையில் பட்டா மாறுதல்

தமிழக வருவாய்த் துறையைப் பொறுத்தவரை நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.

சில தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் விஜய் இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் துறைரீதியான கூட்டம் நேற்று (ஜூலை 3) நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
என்னென்ன மாறுதல்?
Image Credit : Gemini AI

என்னென்ன மாறுதல்?

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை நிலத்தினை விற்பனை செய்யும் போது. விற்பனையாளரின் மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் கையொப்பமிடும் (Co-Sign) பட்சத்தில் இச்சேவையினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இனிமேல் நிலத்தினை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign)நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

Press Statement of Hon’ble Minister for Revenue and Disaster Management on “Simplification of online Patta Transfer not Involving Subdivisions – Auto-mutation”#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | @KASengottaiyan | pic.twitter.com/wYDkRORCjf

— TN DIPR (@TNDIPRNEWS) July 3, 2026

Related Articles

Related image1
₹5 lakhs for Women:பெண்கள் பெயரில் நிலம் வாங்க அரசே 5 லட்சம் ரூபாய் தருது! யார் யார் வாங்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?
Related image2
TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் இதோ!
34
நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்
Image Credit : our own

நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்

மேலும் நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை. இனிமேல் ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

44
இனிமேல் கால விரயம் குறையும்
Image Credit : our own

இனிமேல் கால விரயம் குறையும்

முன்பு நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும். இனிமேல் நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.

தமிழக அசரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
Recommended image2
Now Playing
மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
Recommended image3
Now Playing
"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!
Related Stories
Recommended image1
₹5 lakhs for Women:பெண்கள் பெயரில் நிலம் வாங்க அரசே 5 லட்சம் ரூபாய் தருது! யார் யார் வாங்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?
Recommended image2
TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved