- Home
- Lifestyle
- Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
தீபாவளிக்கு வாசலில் வைக்கும் அகல் விளக்குகள் காற்றில் அணைந்தால் அபசகுனம்னு நிறைய பேர் பயப்படுவாங்க. குறைவான எண்ணெயை உறிஞ்சி, காற்றில் அணையாமல் விளக்கு ரொம்ப நேரம் எரிய ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. அதை பத்திதான் இங்க பார்க்கப் போறோம்.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கிடுச்சு. மக்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா பண்டிகை வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. பரண்ல வெச்சிருந்த பழைய அகல் விளக்குகள், ஆகாச தீபங்களை எடுத்து சுத்தம் செய்யுற வேலை இப்போ ஜோரா நடக்குது.
Village Style Fish Fry: நெல்லிக்காய் சேர்த்து செய்யும் இந்த மீன் வறுவல் ருசி வேற லெவல்!
விளக்கு அணைந்தால் அபசகுனமா?
தீபாவளினாலே தீபங்களின் பண்டிகைதான். வாசல்ல சிலர் 5 அல்லது 11 நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏத்துவாங்க. ஆனா, காத்துல விளக்கு அடிக்கடி அணைஞ்சிடும். இப்படி விளக்கு அணையுறத சிலர் அபசகுனமா நினைப்பாங்க. உங்களுக்கும் அந்த பயம் இருந்தா, நாங்க சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க. விளக்கு காத்துல அணையாம நல்லா எரியும்.
DMart Shopping: டிமார்ட்டில் மளிகை சாமான் வாங்குறீங்களா? இதையெல்லாம் மொத்தமா வாங்குனா காசு வேஸ்ட்!
விளக்கு ஏற்ற சூப்பர் டிப்ஸ்
விளக்கு ஏத்த நமக்கு பஞ்சு திரி தேவை. இப்போ கடைகள்ல ரெடிமேட் திரிகள் நிறைய கிடைக்குது. இந்த திரிகளை அகல் விளக்குல போடுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை செய்யணும். இந்த ஒரு டிப்ஸ் செஞ்சா, விளக்கு ரொம்ப நேரம் பிரகாசமா எரியும்.
நெயில் பாலிஷ் ட்ரிக்
முதல்ல திரியை உள்ளங்கையில வெச்சி நல்லா உருட்டிக்கோங்க. இப்போ திரியோட நுனியில கொஞ்சமா நெயில் பாலிஷை தடவி காய வைங்க. நெயில் பாலிஷ் நல்லா காய்ஞ்சதும், அந்த திரியை விளக்குல வெச்சி எண்ணெய் ஊத்துங்க.
காற்றில் அணையாத விளக்கு
நெயில் பாலிஷ் தடவுன பகுதி திரியோட நுனியில இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. இப்போ திரியில நெருப்பு பத்த வைங்க. இப்படி செஞ்சா விளக்கு குறைவான எண்ணெயை உறிஞ்சி ரொம்ப நேரம் எரியும். லேசான காத்து அடிச்சா கூட உங்க விளக்கு அணையவே அணையாது.
(பொறுப்புத்துறப்பு: இது இணையத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஏசியாநெட் நியூஸ் உறுதிப்படுத்தவில்லை. வாசகர்கள் இதை தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.)
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





