MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!

Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!

Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 20 2026, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Magalir Urimai Thogai Update
Image Credit : Asianet News

Magalir Urimai Thogai Update

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களும் காப்பி அடித்து தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:  Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : AI

மகளிர் உரிமைத் தொகை

இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாயை 2500 ஆக உயர்த்தி தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ள நிலையில், எப்போது 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நிதி நிலையை காரணம் காட்டி கடந்த இரண்டு மாதங்களாக கடந்த திமுக கொடுத்ததைப் போலவே ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகின்றனர். இதனிடையே 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!

Related Articles

Related image1
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Related image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
35
அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்
Image Credit : Asianet News

அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்

மேலும் புதிய பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் அட்டை முக்கியமாகும். ஆனால் புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த திட்டத்தில் பலருக்கும் இணைய முடியாமல் இருந்து வந்தது. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. எனவே உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!

45
அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க முடியாது
Image Credit : Asianet News

அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க முடியாது

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கும், இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், “மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை, படிப்படியாக அதை சரி செய்த பின்னரே உரிமைத் தொகை வழங்க முடியும் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!

55
பொதுமக்கள் ஏமாற்றம்
Image Credit : Asianet News

பொதுமக்கள் ஏமாற்றம்

அமைச்சர் அருண்ராஜின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமைச்சரின் இந்த கருத்தால் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என தெரிகிறது. மேலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது அமைச்சர் அருண்ராஜ் பேட்டியின் மூலம் தெரிய வருகிறது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 2500 ரூபாயை அடுத்த மாதம் முதல் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
டிவி.கே. விஜய்
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Recommended image2
Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!
Recommended image3
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 ஊக்கத்தொகை.. உங்ககிட்ட இந்த ஆவணம் இருக்கா?
Related Stories
Recommended image1
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved