MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!

PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!

PMMVY Scheme Details in Tamil: இந்தியாவில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனைக் கருதி மத்திய அரசு, ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' (PMMVY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jun 11 2026, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
PMMVY Scheme Details in Tamil
Image Credit : ChatGPT

PMMVY Scheme Details in Tamil

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வெற்றிகரமாக 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த கர்ப்பிணி பெண்களுக்கு, சத்தான உணவு மற்றும் ஓய்வை வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது. தாய்மை காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்க இந்த திட்டம் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:  Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கர்ப்பணிகளுக்கு தவணை முறையில் பணம் கிடைக்கும்
Image Credit : Asianet News

கர்ப்பணிகளுக்கு தவணை முறையில் பணம் கிடைக்கும்

‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் பொழுது அரசாங்கம் ரூ.5,000 வழங்குகிறது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தாய்க்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது இடைத்தரகர்களின் தலையீடு எதுவும் இல்லாமல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த மானியம் இரண்டு தவணை முறைகளாக வழங்கப்படுகிறது. கர்ப்பத்திற்கு பின்னர் பெயர் பதிவு செய்த உடனேயே ரூ.3,000 கிடைக்கிறது. மீதமுள்ள ரூ.2,000 குழந்தை பிறந்த பின் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:  Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!

Related Articles

Related image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Related image2
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
37
PMMVY திட்டத்தின் முக்கிய நோக்கம்
Image Credit : Getty

PMMVY திட்டத்தின் முக்கிய நோக்கம்

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் வெறும் பணம் வழங்குவது மட்டுமே கிடையாது. தாய் சேய் ஆகிய இருவரின் நலனில் அக்கறை செலுத்தும் பொருட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள், பெண்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும், முறையான ஊட்டச்சத்து மூலம் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த திட்டம் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:  Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!

47
PMMVY திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள்
Image Credit : Getty

PMMVY திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள்

இந்தத் திட்டம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய பிரிவினருக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

  • பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த பெண்கள்.
  • பகுதியளவு (40%) அல்லது முழுமையான மாற்றுத்திறனாளி பெண்கள்.
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை வைத்திருக்கும் பெண்கள்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வரும் பெண் பயனாளிகள்.
  • இ-ஷ்ரம் அட்டையை வைத்திருக்கும் பெண்கள்
  • கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள பெண் விவசாயிகள்.
  • ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான நிகர குடும்ப வருமானம் உள்ள பெண்கள்.
  • அங்கன்வாடி பணியாளர்கள்
  • மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஏதேனும் வேறு வகை பெண்கள்

மேற்கூறப்பட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைய தகுதியுள்ளவர்களாவர்.

இதையும் படியுங்கள்:  Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!

57
சுமார் 4.5 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்
Image Credit : Getty

சுமார் 4.5 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, இதுவரை சுமார் 4.5 கோடி பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். சுமார் ரூ.19,000 கோடிக்கு அதிகமான தொகை நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடித்தட்டு பெண்களை சென்றடைந்துள்ளது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!

67
ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குகிறது
Image Credit : istockphoto

ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குகிறது

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பால், பழங்கள், முட்டை போன்ற சத்தான உணவுகள் தேவைப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் பெண்களுக்கு இதுபோன்ற சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இது வயிற்றில் வளரும் சிசுவையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே இது போன்ற பெண்களுக்கு அரசு வழங்கும் இந்த நிதி ஒரு பெரும் ஆதரவாக அமைகிறது. தாய்மையின் போது ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான அழுத்தங்களை குறைக்க அரசாங்கம் இந்த பெரிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

77
PMMVY திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : our own

PMMVY திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் கர்ப்பம் தரித்த உடனேயே அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார மையத்தில் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா (PMMVY) திட்டத்தின் கீழ் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகளை முறையாக சமர்ப்பித்தால், பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். இதுவரை இந்த திட்டம் குறித்து தெரியாதவர்கள் இனி இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள். கர்ப்பமாக இருக்கும் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களும் பயன்பெறும் வண்ணம் செய்யுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மத்திய அரசு
அரசு திட்டம்
உதவித்தொகை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Uzhavar App Update: விவசாயிகளுக்கு குட்நியூஸ்! வேளாண் இயந்திரங்கள் எளிதில் வாடகைக்கு பெறலாம்! எப்படி தெரியுமா?1
Recommended image2
அடிக்கடி ரயிலில் பயணிக்குறீங்களா..? இனி மறக்காம ID, QR கோட் செக் பண்ணுங்க.. ரயில்வே கிடுக்குப்பிடி
Recommended image3
Govt Job: 12 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை காத்திருக்கு.! உடனே அப்ளை பண்ணுங்க.!
Related Stories
Recommended image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Recommended image2
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved