MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!

Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!

Cashews for 50 Rupees Per Kg: இந்தியாவுல ஒரு கிராமத்துல ரொம்ப மலிவான விலைக்கு முந்திரி விற்பனை செய்றாங்க. உங்க கையில 100 ரூபாய் இருந்தா போதும், ஒரு பை நிறைய முந்திரி வாங்கிட்டு வரலாம். அந்த கிராமம் எங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க. 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 08 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cashews for 50 Rupees Per Kg
Image Credit : ChatGPT

Cashews for 50 Rupees Per Kg

முந்திரி பருப்பு நெனச்சாலே வாயில் எச்சில் ஊறும். ஆனா கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கிறதால பலரும் வாங்க யோசிக்கிறாங்க. ஆனா, ஜார்கண்ட்ல இருக்க ஒரு கிராமத்துல கிலோ 30 ரூபாய்க்கு கூட முந்திரி வாங்கலாம். ஜம்தாரா மாவட்டத்துல இருந்து 4 கி.மீ. தூரத்துல இருக்குற நாலா கிராமம்தான் அது. இதை 'ஜார்க்கண்டின் முந்திரி நகரம்'னே சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:  Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காய்கறிகளை விட மலிவான விலை
Image Credit : Getty

காய்கறிகளை விட மலிவான விலை

நாலா கிராமத்துல, காய்கறிகளோட சேர்த்து முந்திரியையும் ரோட்டுல வெச்சு விக்கிறாங்க. சொல்லப்போனா, சில காய்கறிகளை விட முந்திரி விலை இங்கே கம்மி. காரணம், இந்த ஊர்ல சுமார் 50 ஏக்கர் பரப்புல முந்திரி விவசாயம் நடக்குது. ஆனா, இதை வெளியூருக்கு கொண்டுபோய் விற்க வசதி இல்லாததால, வர்றவங்ககிட்டயே மலிவா விற்றுவிடுகிறார்கள். இவர்களிடம் மலிவாக வாங்கும் வியாபாரிகள், 10 மடங்கு அதிக விலைக்கு வெளியே விற்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!

Related Articles

Related image1
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Related image2
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
35
முந்திரியை சந்தைப்படுத்த போதுமான வசதிகள் இல்லை
Image Credit : Getty

முந்திரியை சந்தைப்படுத்த போதுமான வசதிகள் இல்லை

2010-க்கு முன்னாடி, இந்த கிராம மக்களுக்கு என்ன பயிர் பண்றதுனே தெரியாம இருந்துச்சு. அப்போதான், வனத்துறை அதிகாரிகள் இந்த பகுதியோட தட்பவெப்பமும், மண்ணும் முந்திரி விவசாயத்துக்கு ஏத்ததுனு கண்டுபிடிச்சாங்க. விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுத்தாங்க. அதுல இருந்து பெரிய அளவுல முந்திரி சாகுபடி செய்றாங்க. ஆனா, விளைஞ்ச முந்திரியை பதப்படுத்தவோ, சந்தைப்படுத்தவோ வசதி இல்லாததால, உண்மையான விலையில கால் பங்கு விலைக்கு ரோட்டோரத்துல விக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க.

இதையும் படியுங்கள்: Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

45
விவசாயிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை
Image Credit : Getty

விவசாயிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை

2010-ல் ஜம்தாரா மாவட்ட துணை ஆணையரா இருந்த ஐஏஎஸ் அதிகாரி கிருபானந்த் ஜா தான், இந்த கிராமத்தின் மண் மற்றும் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து முந்திரி சாகுபடிக்கு முன் முயற்சிகளை எடுத்தார். விவசாய விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து இதை சாத்தியமாக்கினார். ஆனாலும், விவசாயிகளுக்கு இதனால பெரிய லாபம் கிடைக்கல.

இதையும் படியுங்கள்: Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?

55
முந்திரி விவசாயிகளின் பரிதாப நிலை
Image Credit : Getty

முந்திரி விவசாயிகளின் பரிதாப நிலை

அதற்கு காரணம், முந்திரியை பதப்படுத்தும் ஆலை (processing plant) இங்கே இல்லை. அப்படி ஒரு ஆலை இருந்தா, இங்கிருந்தே ஏற்றுமதி செய்யலாம், உள்ளூர்ல வேலைவாய்ப்பும் பெருகும். ஆனா, இதை யாரும் கண்டுக்காததால, விவசாயிகள் காய்கறிகளோட சேர்த்து முந்திரியையும் ரோட்டுல வெச்சு வித்துட்டு இருக்காங்க. உங்க நண்பர்கள் யாராச்சும் ஜார்க்கண்ட் ல இருந்தா 100 ரூபாய்க்கு முந்திரி வாங்கிட்டு வர சொல்லுங்க. ஒரு வருஷம் முழுவதும் வச்சி சாப்பிடலாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கிச்சன் பிசுபிசுப்புக்களை ஈஸியாக சுத்தம் செய்ய 6 சூப்பர் வழிகள்
Recommended image2
Name Astrology: உங்க பெயரில் 4, 5 அல்லது 6 எழுத்துகளா? யாருக்கு பணம், காதல், வெற்றி அதிகம் தெரியுமா?
Recommended image3
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Related Stories
Recommended image1
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Recommended image2
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved