MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

How to Make Rocket Stove in Tamil: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதையடுத்து சிலிண்டர் விலையும் உயரக்கூடும் என்கிற செய்தி பரவி வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு போன்ற காலகட்டங்களில் ராக்கெட் அடுப்பு சிறந்த மாற்றாகும்.  

3 Min read
Author : Ramprasath S
Published : May 18 2026, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
How to Make Rocket Stove in Tamil
Image Credit : ChatGPT

How to Make Rocket Stove in Tamil

உலக அளவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வணிக சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்யும் நாட்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல், டீக்கடைகள் மற்றும் உணவு சார்ந்த தொழில்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருப்பதால் சிலிண்டர் விலையும் உயரலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி?
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி?

கேஸ் விலை உயர்வு அல்லது சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளில் ராக்கெட் அடுப்பு சிறந்த மாற்றாக அமைகிறது. இந்த அடுப்பு குறைந்த விறகுகளை பயன்படுத்தி புகையில்லாமல் சமைக்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த பிரத்யேக வடிவமைப்பைக் கொண்ட அடுப்பு விறகுகளை முழுமையாக எரித்து, புகையை குறைத்து, நேரடியாக வெப்பத்தை சமையல் பாத்திரத்திற்கு கடத்துகிறது. இந்த அடுப்பின் அடிப்பாகம் L வடிவத்தில் இருப்பதால் காற்றோட்டம் அதிகரிக்கப்பட்டு, நெருப்பு தீவிரமாக எரிந்து உணவு வேகமாக சமைக்க பயன்படுகிறது.

Related Articles

Related image1
LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!
Related image2
PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?
38
புகையில்லா விறகு அடுப்பு தயாரிக்கும் முறை
Image Credit : Yotube

புகையில்லா விறகு அடுப்பு தயாரிக்கும் முறை

பாரம்பரிய விறகு அடுப்புகளை ஒப்பிடுகையில் குறைந்த அளவு விறகுகளே இதற்கு போதுமானது. சிறிய குச்சிகள், காய்ந்த இலைகள், சிறிய கிளைகளைக் கொண்டு இந்த அடுப்பில் எளிதாக சமைக்க முடியும். விறகுகள் முழுமையாக எரிவதால் புகை வெளியேற்றமும் மிகவும் குறைவு. இதனால் சுவாசப் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்த அடுப்பை பயன்படுத்துவதால் சமையலறையும் மிகவும் தூய்மையாக இருக்கும். வெப்பம் பிற பகுதிகளுக்கு சிதறாமல் பாத்திரத்திற்கு நேரடியாக சமைக்கப்படுவதால் கேஸ் அடுப்பை விட கூடுதல் வேகத்துடன் உணவு சமைக்க முடியும். மேலும் காசு கொடுத்து விறகு வாங்க வேண்டும் என்கிற அவசியமும் இருக்காது.

48
ராக்கெட் அடுப்பு வடிவமைப்பு
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பு வடிவமைப்பு

இந்த அடுப்பு செய்வதற்கு 10 முதல் 15 செங்கற்கள், சிமெண்ட் அல்லது களிமண் கலவை, இரும்பு சல்லடை அல்லது கம்பி ஆகியவை தேவையானப் பொருட்களாகும். வீட்டிலேயே இந்த அடுப்பை எளிதாகச் செய்ய முடியும். தரையில் செங்கற்களை கொண்டு ‘ப’ வடிவப் பாதையை உருவாக்க வேண்டும். இது காற்று உள்ளே சென்று விறகு எரியும் இடமாகும். மேல் பகுதியில் செங்குத்தான புகை போக்கி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். செங்கற்களை அடுக்கி உருவாக்கும் இந்த அமைப்புக்கு இடையே உள்ள இடைவெளிகளை களிமண் அல்லது சிமெண்ட் கொண்டு அடைத்து விடவும். இது காற்று கசிவதைத் தடுத்து, வெப்பத்தை மேல் நோக்கி செலுத்த உதவும்.

58
ராக்கெட் அடுப்பு பயன்படுத்தும் முறை
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பு பயன்படுத்தும் முறை

இதன் மேற்புறத்தில் பாத்திரம் வைப்பதற்கான ஒரு ஸ்டாண்ட் அல்லது மூன்று செங்கற்களை முக்காலி போல வைக்க வேண்டும். யூடியூபில் ராக்கெட் ஸ்டவ் செய்வது எப்படி? என்ற வீடியோக்களை பார்த்தும் இதை செய்யலாம். இந்த அடுப்பை மூடிய அறைக்குள் பயன்படுத்தக் கூடாது. நன்கு காற்றோட்டமான இடங்கள், பால்கனிகள், வீட்டின் முற்றம், வீட்டின் பின்புறம், கொல்லைப்புறம் ஆகிய இடங்களில் வைக்கலாம். மொட்டை மாடிகளில் இந்த செட்டப்பை அமைத்துக் கொண்டால் மாலை அல்லது இரவு நேரங்களில் இந்த அடுப்பை பயன்படுத்தி சமைத்துக் கொள்ளலாம்.

68
ராக்கெட் அடுப்பின் பயன்கள்
Image Credit : Youtube

ராக்கெட் அடுப்பின் பயன்கள்

பாரம்பரிய விறகு அடுப்பை போல இந்த அடுப்பிற்கு அதிக விறகுகுகள் தேவையில்லை. மரக்கட்டைகள், மரத்துண்டுகள், தேங்காய் ஓடுகள், காய்ந்த இலைகள், விவசாயக் கழிவுகள், தென்னை மட்டைகள், சிறிய சுள்ளிகள் ஆகியவற்றை கொண்டு சிறப்பாக சமைக்கலாம். இதனால் 50 முதல் 70% வரை விறகு செலவு குறைகிறது. வெப்பத்தை ஒருமுகப்படுத்துவதால் குறைந்த நேரத்தில் சமையல் செய்யப்படுகிறது. விவசாயக் கழிவுகளை பயன்படுத்துவதால் மரம் வெட்டுவதும் தவிர்க்கப்படுகிறது. கார்பன் உமிழ்வு மிகக் குறைவு. சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது மின்சாரத் தடை போன்ற எந்த காரணங்களாலும் உங்கள் சமையல் பாதிக்கப்படாது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது எந்நேரமும் எளிய முறையில் சமைக்கலாம்.

78
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ராக்கெட் அடுப்பு
Image Credit : Yotube

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ராக்கெட் அடுப்பு

அளவில் சிறியதாக இருப்பதால் இது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். சுற்றுலா, பண்ணை வீடுகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். அவ்வப்போது அடுப்பின் அடியில் சேரும் சாம்பலை அகற்ற வேண்டும். இது காற்றோட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். திறந்தவெளி அல்லது நன்கு காற்றோட்டமான இடத்தில் அடுப்பை பயன்படுத்த வேண்டும். அடுப்பின் பயன் முடிந்த பிறகு முற்றிலும் அணைந்து விட்டதை உறுதி செய்யவும். சிறு குழந்தைகளை அடுப்பருகில் விட வேண்டாம். குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

88
தன்னிறைவான சமையலுக்கு வழிவகுக்கும்
Image Credit : Getty

தன்னிறைவான சமையலுக்கு வழிவகுக்கும்

இதுபோன்ற எளிய தொழில்நுட்பங்கள் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் தன்னிறைவான சமையலுக்கு வழிவகுக்கும். உங்கள் வீட்டிலேயே குறைந்த செலவில் இது போன்ற அடுப்பை செய்து பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வாயு உருளை
எரிவாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trick to identify artificial Mangoes : ஒரு எலுமிச்சை போதும்... கல் வச்சு பழுத்த மாம்பழத்தை ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ
Recommended image2
சட்டென்று மாறுது வானிலை...நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
Recommended image3
Hotel : ஹோட்டலில் இந்த பொருட்களில் டாய்லெட்டைவிட அதிகமாக அழுக்கு.. பயன்படுத்தும் முன் கவனம்!
Related Stories
Recommended image1
LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!
Recommended image2
PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved