சங்கீத நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட கேஎல் ராகுல் அதியா ஷெட்டி: வைரலாகும் புகைப்படங்கள்!
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தங்களது திருமணத்திற்கு முன்னதாக நடந்த மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதியா ஷெட்டி மெஹந்தி
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இருவரும் கடந்த 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன் சங்கீத மற்றும் மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!
அதியா ஷெட்டி மெஹந்தி
கடந்த 22 ஆம் தேதி நடந்த கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இந்த சங்கீத நிகழ்ச்சி நடந்துள்ளது.
சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும், கேஎல் ராகுலுக்கும் மகாராஷ்டிராவில் உள்ள கண்டாலாவில் சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்னதாகவும், திருமணம் நடந்த பிறகும் நடந்த சடங்கு சம்பிரதாயங்களின் புகைப்படங்களை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
சங்கீத நிகழ்ச்சி
திருமணத்திற்கு முன் நடந்த சங்கீத நிகழ்ச்சியில் கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் நடனம் ஆடி அசத்தியுள்ளனர். அப்போது அதியா ஷெட்டி வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். கேஎல் ராகுல் குர்தா அணிந்திருந்தார்.
அதியா ஷெட்டி
நடிகை அதியா ஷெட்டி கையில் மெஹந்தி வைத்த பிறகு தனது தோழிகளுடன் சிரித்து பேசி மகிழ்ந்துள்ளார். அதன் பிறகு தனியா நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
மஞ்சள் பூசி விளையாடும் நலங்கு வைபவம்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ஒருவருக்கொருவர் மஞ்சள் பூசி விளையாடும் நலங்கு வைபவம் நடந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
கேஎல் ராகுலுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர்களும், அதியா ஷெட்டிக்கு அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களும் மணமக்களுக்கு மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.
கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி யார்? பாலிவுட் நடிகருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
ஹல்தி
ஹல்தி (Haldi) எனப்படும் மஞ்சள் பூசும் வைபம் திருமணத்திற்கு பின் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
கேஎல் ராகுலுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர்களும், அதியா ஷெட்டிக்கு அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களும் மணமக்களுக்கு மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.
கேஎல் ராகுல்
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர். கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று பாலிவுட் நடிகரும், அதியா ஷெட்டியின் தந்தையுமான சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!
மனா ஷெட்டி
சுனில் ஷெட்டியின் மனைவியும், அதியா ஷெட்டியின் அம்மாவுமான மனா ஷெட்டி தனது மகளின் திருமணத்திற்கு முன்னதாக அவருக்கு பூ வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.
மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!
அதியா ஷெட்டி நலங்கு
அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைக்கும் சாஸ்திர சம்பிராதய நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதியா ஷெட்டி - வெற்றிலை பாக்கு
நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில் அதியா ஷெட்டியின் தனது கையில் வெற்றிலை பாக்குடன் காணப்பட்டார். அப்போது உறவினர்கள் அவருக்கு நலங்கு வைத்தனர்.
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாக வருங்கால காதல் கணவர் கேஎல் ராகுலின் மார்பில் சாய்ந்தபடி நகைகள் அணிந்து அதியா ஷெட்டி காணப்பட்டார். கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு முன்னதாக மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியும், திருமணத்திற்கு பின்னர் மஞ்சள் பூசும் ஹல்தி விழாவும் சிறப்பாக நடந்துள்ளது.