சுனில் ஷெட்டி கொடுத்த 50 கோடி பங்களா!.. அதியா ஷெட்டி - கே.எல்.ராகுலுக்கு பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் என்ன.?
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் கடந்த 23ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
சுனில் ஷெட்டி தனது மகள் மற்றும் மருமகனுக்கு மிக விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான சல்மான் கான் அதியாவுக்கு ஆடி காரை பரிசளித்துள்ளார். இந்த ஆடி காரின் விலை சுமார் 1.64 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
சுனில் ஷெட்டியின் மற்றொரு நண்பரான ஜாக்கி ஷெராப்பும் அதியாவுக்கு விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார். அவருக்கு சோபார்ட் கைக்கடிகாரங்களை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சுவிஸ் சொகுசு கடிகாரங்களின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி சுமார் ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கவாஸாகி நின்ஜா பைக்கை பரிசாக அளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிசார்ட் ஓனரை 13 வருடங்களாக காதலித்து வரும் கீர்த்தி சுரேஷ்! யார் அவர்? வெளியான பரபரப்பு தகவல்!
அதியாவும் கே.எல்.ராகுலும் தற்போது அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். இதனால், ஐபிஎல் முடிந்த பிறகு மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்றும், இதில் சுமார் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையில் வைத்து நடந்த கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?