ரிசார்ட் ஓனரை 13 வருடங்களாக காதலித்து வரும் கீர்த்தி சுரேஷ்! யார் அவர்? வெளியான பரபரப்பு தகவல்!
நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 13 ஆண்டுகளாக ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாக தற்போது வெளியாகி உள்ள தகவல், திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் அறிமுகமானவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் இரண்டாவது மகளான கீர்த்தி, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக மாறியவர்.
நடிகர், நடிகைகளின் வாரிசுகள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க துவங்கினாலும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து விடுவதில்லை. அந்த வகையில், கீர்த்தி சுரேஷ் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த 'இது என்ன மாயம்' திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்து ரஜினி முருகன், ரெமோ, போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
BiggBoss Vikraman: 'பிக்பாஸ்' விக்ரமனின் தங்கை இவரா? கவனத்தை ஈர்க்கும் தமிழரசியின் புகைப்படங்கள்..!
குறிப்பாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான, 'மகாநடி' திரைப்படம் கீர்த்தி சுரேஷின் நடிப்பை உலகறிய செய்ததோடு, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
மகாநடி வெற்றிக்கு பின்னர் விஜய், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் கை வசம், மாமன்னன், சைரன், ரகு தாத்தா போன்ற படங்கள் உள்ளன. மேலும் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவர் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்த தசரா திரைப்படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக ரிசார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாரிசு, பாகுபலி படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் கணவரும், இயக்குனருமான ஹரிச்சரண் சீனிவாசன் மரணம்!
அந்த நபர் கீர்த்தி சுரேஷ் உடன் பள்ளியில் படித்தவர் என்றும், இருவரும் பள்ளி காலங்களில் இருந்தே காதலித்து வருவதாகவும், இருவருடைய பெற்றோர் வீட்டிலும்... இவர்களுடைய காதலிக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி அது வதந்தியாக மாறிய நிலையில், இந்த தகவலும் அதே போல் வதந்தியாக இருக்குமா? அல்லது உண்மையாய் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.