BiggBoss Vikraman: 'பிக்பாஸ்' விக்ரமனின் தங்கை இவரா? கவனத்தை ஈர்க்கும் தமிழரசியின் புகைப்படங்கள்..!
'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி, என்கிற அடையாளத்தோடு நுழைந்து, 106 நாட்கள் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் டஃப் கொடுத்து விளையாடி வந்த விக்ரமனின் தங்கை புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில், மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் மக்களின் ஆதரரோடு நூறு நாட்களுக்கு மேல் பல்வேறு விமர்சனங்களை கடந்து, தன் நிலை மாறாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடி வந்த விக்ரமன், பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், அவரை தொடர்ந்து... அவரின் தங்கை தமிழரசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருடைய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகிறது.
பிக்பாஸ் ஃபைனலின் போது, விக்ரமனின் தங்கை தன்னுடைய பெற்றோருடன்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 'விக்ரமன்' இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், தன்னுடைய பெற்றோருடன் மேடைக்கு வந்து பேசிய தமிழ்ச்செல்வி, 106 நாட்கள், இந்த வீட்டுக்குள் பல பிரச்சனைகள், பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னிலை மாறாமல் மக்கள் முன்பு எது பேசினாலும் ஒரு பொறுப்பு நமக்கு உண்டு, என்பதை சிந்தித்து பேச வேண்டும், என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தார் என் அண்ணன்.
தாடை... மூக்கில் ஆபரேஷன்! விஜய் ஆன்டனியின் தற்போதைய நிலை என்ன? புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட தகவல்!
அவருக்கு தங்கை என்பதை சொல்வதற்கே மிகவும் பெருமையாக இருக்கிறது என தெரிவித்தனர். 'விக்ரமனை' போலவே அவருடைய தங்கையும், ஆக்கபூர்வமாக பேசுவதாக நெட்டிசன்கள் மற்றும் விக்ரமனின் ஆர்மியை சேர்த்தவர்கள் கூறி வந்தனர்.
முன்னதாக தன்னுடைய சகோதரி தமிழரசி குறித்து, விக்ரமன் பேசியபோது தன்னுடைய தங்கை மிகவும் புத்திசாலித்தனமானவர், சமூக சிந்தனை கொண்டவர், அவரிடம் பல விஷயங்களை நான் விவாதித்துள்ளேன் என தெரிவித்தார்.
அதே போல் எப்போதும் நான் வியந்து பார்க்கக்கூடிய பெண்களின் தன்னுடைய தங்கை தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு பேசி இருந்தார்.
தற்போது விக்ரமனின் சகோதரி தமிழரசியில் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில், தமிழரசி மிகவும் மாடர்ன் பெண்ணாகவும், போல்டான பெண்ணாகவும் தெரிகிறார்.
அதே போல் நாடகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும் தெரிகிறது. இவரின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.