திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக கணவன் மனைவியாக கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ஊடகங்களுக்கு போஸ் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நெருங்கிய உறவினர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?
திருமணத்திற்கு முன்னதாக நேற்று நடந்த மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று நடக்கும் திருமணத்தைத் தொடர்ந்து கணவன் மனைவியாக கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் இன்று மாலை 6.30 மணியளவில் ஊடகங்களுக்கு போஸ் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
திருமணம் காரணமாக நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.