பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் இன்று மாலை 4 மணிக்கு மகராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் நடக்க இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இருவீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
இந்த நிலையில், 23 ஆம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு திருமணம் கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு நேற்று நடந்த சங்கீத நிகழ்ச்சியின் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து திருமணம் நிகழ்ச்சி நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை முடித்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மூத்மேன் கில்: சுப்மன் கில்லுக்கு புனைப்பெயர் வைத்த சுனில் கவாஸ்கர்!