ஸ்மூத்மேன் கில்: சுப்மன் கில்லுக்கு புனைப்பெயர் வைத்த சுனில் கவாஸ்கர்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு, இந்திய அணியின் வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சுனில் கவாஸ்கர், ஸ்மூத்மேன் கில் என்று புனைப்பெயர் வைத்துள்ளார்.
 

Sunil Gavaskar gives new nickname to Shubman Gill as a Smoothman Gill

இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு புனைப்பெயர் உண்டு. ரசிகர்களும் அவர்களை அப்படியே சொல்வதும் உண்டு. எம் எஸ் தோனிக்கு கூல் தோனி என்றும், ரோகித் சர்மாவுக்கு ஹிட்மேன் என்றும், கோலிக்கு கிங் கோலி என்றும், தடுப்புச் சுவர் என்றும் சொல்வது உண்டு. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணியின் வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சுனில் கவாஸ்கர் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு புனைப்பெயர் வைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் ஆண்கள், பெண்கள் டி20 கிரிக்கெட்: 6 அணிகள் கொண்ட கிரிக்கெட்டிற்கு ஐசிசி பரிந்துரை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. அதன்படிம் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார். இஷான் கிஷான் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ரோகித் சர்மா மறந்து நின்ற நேரத்தை விட நியூசிலாந்து ஆடிய நேரம் கம்மிதான்: சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்!

இந்த நிலையில், எப்படி இந்திய வீரர் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர் இருக்கிறதோ, அதே போன்று சுப்மன் கில்லுக்கும் தற்போது புனைப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சுனில் கவாஸ்கர் தான் சுப்மன் கில்லுக்கு அழகான புனைப்பெயர் வைத்துள்ளார். இது குறித்து சுனில் கவாஸ்கர் மற்றும் சுப்மன் கில் இருவருமே பேசிக் கொண்டுள்ளனர். சின்னதாக நடந்த ஒரு உரையாடலின் போது சுனில் கவாஸ்கர், சுப்மன் கில் உனக்கு நான் புனைப்பெயர் வைத்துள்ளேன். நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

ஜோஸ் பட்லர் அதிரடி வீண் - மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

அதற்கு சுப்மன் கில் எனக்கு ஒன்றும் கவலையில்லை சார் என்றுள்ளார். அதன் பிறகு தான் அவரது பெயரை கூறியிருக்கிறார். அதன்படி, சுப்மன் கில்லுக்கு ஸ்மூத்மேன் கில் என்று புனைப்பெயர் வைத்துள்ளார். கடந்த ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 24 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்தூரில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios