ஜோஸ் பட்லர் அதிரடி வீண் - மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான 16ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் SA20 எனப்படும் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், மொத்தமாக 6 மணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த 16ஆவது போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், விக்கெட் கீப்பர் ரோலெப்சென், வாண்டர் டுசென், ஜார்ஜ் லிண்டே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 20 ஓவர்கள் முடிவி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.
ICC ODI Ranking: தொடரும் போச்சு, ஐசிசி நம்பர் 1 இடமும் போச்சு: தவிக்கும் நியூசிலாந்து!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மட்டும் அதிகபட்சமாக 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மேலும் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இடம் பிடித்துள்ளது.
நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்
நேற்று நடந்த 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கெரால்டு கோட்ஜீ வேகப்பந்து வீச்சில் சின்னா பின்னமானது. அந்த அணி 18.4 ஓவர்கள் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி, சிராஜ்!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் லூயிஸ் டூ ப்ளூய் மற்றும் நீல் பிராண்ட் ஆகியோர் ஓரளவு ரன் சேர்க்க அந்த அணி 19.4 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.